search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்
    X

    சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்

    முருங்கைக்கீரை மிகவும் சத்து நிறைந்தது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும். இதனை வாரம் மூன்று முறை செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.
    தேவையான பொருட்கள் :

    எண்ணெய்  - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பூண்டு - 7
    இஞ்சி - சிறிய துண்டு
    வெங்காயம் - 2
    தக்காளி - 1
    முருங்கை இலை - 1 கப்
    தண்ணீர் - தேவையான அளவு
    உப்பு, மிளகு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * இஞ்சியை துருவிக் கொள்ளவும்.

    * பூண்டை நசுக்கி வைக்கவும்.

    * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பூண்டு, துருவிய இஞ்சி, போட்டு தாளித்த பின்  வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
     
    * வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    * பிறகு முருங்கை இலைகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு 10 நிமிடம் வேக விடவும்.

    * கடைசியாக உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து பரிமாறவும்.

    * இந்த சூப் மிகவும் சத்து நிறைந்தது. வாரம் மூன்று முறை இந்த சூப் செய்து குடிப்பது மிகவும் நல்லது.

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×