என் மலர்
ஆரோக்கியம்

மிருதுவான தேப்லா செய்வது எப்படி
மிகவும் சுவையான மிருதுவான தேப்லா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 2 கப்,
நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - அரை டீஸ்பூன்.
செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, நெய் போட்டு ஒன்றாகக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து மெத்தென்று பிசைந்து அரை மணி நேரம் மூடி வையுங்கள்.
* மாவை பூரியை விட சற்று பெரிய சப்பாத்திகளாக, மெல்லியதாக திரட்டுங்கள்.
* தோசைக்கல்லைக் காயவைத்து, திரட்டிய சப்பாத்தியை போட்டு இரு புறமும் திருப்பிவிட்டு, அது உப்பும்போது, சற்று கனமான துணியைக் கொண்டு லேசாக அழுத்திவிடுங்கள். அதனுள் இருக்கும் காற்று, மற்ற இடங்களுக்குப் பரவி பூரி போல எழும்பி வரும். மறுபுறம் திருப்பிவிட்டு, மீண்டும் லேசாக துணியால் அழுத்திவிட்டு எடுத்து, சிறிதளவு நெய் தடவி வையுங்கள்.
* இந்த சப்பாத்தி மிகவும் மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும்.
* குஜராத்தில் பிரபலமானது இந்த தேப்லா. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி சுவையாக இருக்கும்.
குறிப்பு: சாப்பாத்தி மாவு பிசையும்போது, நெய் விரும்பாதவர்கள் வெறும் உப்பு, தண்ணீர் மட்டும் சேர்த்துப் பிசையலாம்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story