என் மலர்

  ஆரோக்கியம்

  இருமலை போக்கும் சித்தரத்தை சூப்
  X

  இருமலை போக்கும் சித்தரத்தை சூப்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சளி, இருமலை நீக்கி புத்துணர்ச்சி தரும் இந்த சூப். சளி தொல்லை இருப்பவர்கள் இதை தினமும் இருவேளை அருந்த வேண்டும்.
  (இரண்டு பேருக்கு போதுமானது)

  தேவையான பொருட்கள் :

  சித்தரத்தை கிழங்கு - 10 கிராம்
  சிறிய வெங்காயம் - 10
  பச்சைமிளகாய் - 2
  மிளகு பொடி - அரை தேக்கரண்டி
  எலுமிச்சை இலை - 10
  தூள் செய்த வெல்லம் - 1 தேக்கரண்டி
  தேங்காய் பால் - 200 மி.லி.
  உப்பு - தேவைக்கு

  செய்முறை :

  * எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  சித்திரத்தை கிழங்கை இடித்து கொள்ளவும்.

  * வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  * ஒரு பாத்திரத்தில் 300 மி.லி. நீர் ஊற்றி, நீரில் சித்தரத்தை கிழங்கை சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  * அத்துடன் வெங்காயம், பச்சைமிளகாய், நாரத்தை இலை, மிளகு பொடி கலந்து நன்கு கிளறி, 5 நிமிடம் சிறு தீயில் கொதிக்க விடவும்.
  * கடைசியாக அதில் தேங்காய் பால், உப்பு, வெல்லதூள் கலந்து இறக்கவும்.

  * இது தாய்லாந்து நாட்டின் பாரம்பரிய சூப். சாதத்துடன் கலந்தும் சாப்பிட ஏற்றது. சளி, இருமலை நீக்கும் புத்துணர்ச்சி உணவு இது.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×