என் மலர்
ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு விருப்பமான ஃப்ரூட் தயிர் சாதம்
சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தயிர் சாதத்தில் ஃப்ரூட்ஸ் கலந்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது ஃப்ரூட் தயிர் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சாதம் - 250 கிராம்,
ஆப்பிள், மாதுளம் பழம் - தலா ஒன்று,
திராட்சைப் பழம் - 100 கிராம்,
கேரட் துருவல் - ஒரு கப்,
புளிக்காத தயிர் - 2 கப்,
உப்பு - சிறிதளவு.
செய்முறை :
* திராட்சை, ஆப்பிளையும் பொடியாக நறுக்கவும்.
* மாதுளையை முத்துகளாக உதிர்த்துக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு நன்றாக மசிக்கவும். பின்னர் அதனுடன் உப்பு, தயிர் சேர்த்து நறுக்கிய பழங்களையும், கேரட் துருவலையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
* இப்போது கலர்புல் ஃப்ரூட் தயிர் சாதம் ரெடி!
குறிப்பு: தயிர்சாதம் சாப்பிடாமல் அடம் பிடிக்கும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். புளிக்காத தயிரை தான் இந்த சாதத்திற்கு பயன்படுத்த வேண்டும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story