என் மலர்

  ஆரோக்கியம்

  சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை
  X

  சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எளிய முறையில் சுவையான சத்தான தக்காளி கோதுமை தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.


  தேவையான பொருட்கள் :

  கோதுமை மாவு - 1 கப்
  தக்காளி - 2
  வெங்காயம் - 2
  ப.மிளகாய் - 2
  உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
  சீரகம் -  அரை ஸ்பூன்
  கொத்தமல்லி - சிறிதளவு

  செய்முறை :

  * தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  * ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.

  * பின்னர் ப.மிளகாய், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.

  * நன்றாக வெந்ததும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வைத்திருந்து அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

  * ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் உப்பு, தக்காளி வெங்காய கலவை, சீரகம், கொத்தமல்லி போட்டு தோவை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

  * அடுப்பில் தோசை கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்
  Next Story
  ×