என் மலர்

  ஆரோக்கியம்

  வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி
  X

  வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
  தேவையான பொருட்கள் :

  கசகசா - 2 தேக்கரண்டி
  தேங்காய் துருவல் - 1 கப்
  பச்சரி குருணை - 150 கிராம்
  உப்பு - சுவைக்கு
  நெய் - 1 தேக்கரண்டி

  செய்முறை :

  * கசகசாவை அரை மணி நேரம் நீரில் ஊறவைத்து அதை தேங்காய் துருவலுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

  * அரிசி குருணையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கஞ்சியாக காய்ச்சிடுங்கள். அரைத்து வைத்துள்ள கசகசா விழுதை அத்துடன் கலந்திடுங்கள்.

  * கஞ்சியை உப்பு மற்றும் நெய் கலந்து பரிமாறுங்கள்.

  * இந்த கஞ்சியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுபுண் குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். முதியர்வர்கள் இதை இரவு சாப்பிட்டால் ஆழ்ந்து தூங்கலாம்.

  * இந்த கஞ்சியை பனங்கற்கண்டு சேர்த்தால் இனிப்பு சுவை கிடைக்கும்.

  - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
  Next Story
  ×