என் மலர்
ஆரோக்கியம்

சுவையான மிளகு, சீரக சாதம்
சுவையான மிளகு, சீரக சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - தேவைக்கேற்றவாறு
வெங்காயம் - 1
கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை - தாளிக்க
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசியைக் நன்றாக கழுவி உதிரியாக வடித்து ஆற வைத்து கொள்ளவும்.
* வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.
* ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பைப் போட்டு வறுத்த பின் அதில் வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து இறக்கவும்.
* சுவையான மிளகு, சீரக சாதம் ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story