என் மலர்
ஆரோக்கியம்

சத்தான மோர் களி செய்வது எப்படி
வீட்டில் இருக்கும் சாமாங்களை வைத்து காலம் காலமாக நம் பாட்டிகள் செய்து வந்த அருமையான சிற்றுண்டி இது.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
நல்லெண்ணெய் - 50 மில்லி
கெட்டி மோர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க :
கடுகு,
உ.பருப்பு,
க.பருப்பு,
மி.வத்தல் மற்றும் மோர் மிளகாய் வத்தல் தலா 2,
பெருங்காயத்தூள்,
கறிவேப்பிலை.
செய்முறை :
* அரிசி மாவு, மோர் கலந்து உப்பு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். (தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்)
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து பின் மாவு கலவையை அதில் ஊற்றவும், கை விடாமல் நிதானமாய் கிளறவும்.
* தள தளவென்று கொதித்து அல்வா போல் ஒட்டாமல் சுருண்டு வரும். அந்த பக்குவம் வந்ததும் ஒரு தட்டில் நல்லெண்ணை தடவி அதில் இதை விட்டு பரப்பவும்.
* ஆறியவுடன் வில்லைகள் போட்டு சாப்பிடவும்.
* சுவையான சத்தான மோர் களி ரெடி.
- உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story