search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி
    X

    குளுகுளு மாம்பழ லஸ்ஸி செய்வது எப்படி

    லஸ்ஸி தயிரைக் கொண்டு செய்யப்படும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு வகையான ஜூஸ் எனலாம். கோடையில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தைக் கொண்டும் லஸ்ஸி செய்யலாம்.
    தேவையான பொருட்கள் :

    தயிர் - 2 கப்
    நறுக்கிய மாம்பழம் - 2 கப்
    தேன் - தேவையான அளவு
    ரோஸ் வாட்டர் - 1 டீஸ்பூன்
    ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
    பிஸ்தா - 2 டீஸ்பூன் (நறுக்கியது)
    குங்குமப்பூ - 1 சிட்டிகை
    ஐஸ் கியூப்ஸ் - சிறிதளவு

    செய்முறை :

    * முதலில் பிளெண்டர் அல்லது மிக்ஸியில் நறுக்கிய மாம்பழத் துண்டுகள் மற்றும் தேன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
    * பின்னர் அதில் தயிர், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ, ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு 1 நிமிடம் அடித்துக் கொள்ள வேண்டும்.

    * பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் ஐஸ் கியூப்ஸ், பிஸ்தா தூவி பரிமாறினால், சுவையான மாம்பழ லஸ்ஸி ரெடி!!!
    Next Story
    ×