search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி
    X

    முருங்கைக்கீரை தோசை செய்வது எப்படி

    உடலின் இரும்புச்சத்து அதிகரிக்க வேண்டுமானால், முருங்கைக்கீரையை அதிகம் உட்கொள்ள வேண்டும். மாறாக முருங்கைக்கீரையை கொண்டு தோசை செய்தும் சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - 1 கப்
    தோசை மாவு - தேவையான அளவு
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    * வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வெங்காயம், ப.மிளகாயை போட்டு நன்றாக வதக்கிய பின்னர் முருங்கைக்கீரையை போட்டு வதக்க வேண்டும்.

    * அடுத்து அதில் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கி இறக்கி, தோசை மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    * தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை கொண்டு தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுத்தால், முருங்கைக்கீரை தோசை ரெடி!!!
    Next Story
    ×