search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேழ்வரகு இட்லி
    X

    கேழ்வரகு இட்லி

    கேழ்வரகில் அதிக அளவு கால்சியம் இருக்கின்றது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு - 3/4 கப்
    உப்பு - 1 தே.கரண்டி

    செய்முறை :

    * உளுத்தம் பருப்பினை குறைந்தது 1 மணி நேரமாவது ஊறவைக்கவும். ஊறவைத்த உளுத்தம் பருப்பினை, இட்லிக்கு அரைப்பது போல மைய அரைத்து கொள்ளவும்.

    * கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

    * கரைத்து வைத்த கேழ்வரகு மாவுடன் உப்பு, அரைத்த உளுத்தம் மாவினை சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.( மிகவும் தண்ணீயாக கரைத்துவிட வேண்டாம்.) இதனை குறைந்தது 6 - 8 மணி நேரம் வைத்து புளிக்கவிடவும்.

    * இட்லி பாத்திரத்தில் அடுப்பில் வைத்து மாவை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

    * சுவையான சத்தான கேழ்வரகு இட்லி ரெடி.
    Next Story
    ×