search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெட்டிவேர் சர்பத்
    X

    வெட்டிவேர் சர்பத்

    கோடை காலத்தில் உஷ்ணத்தின் தாக்கத்தை குறைக்க வெட்டிவேர் சர்பத் செய்து குடிக்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வெட்டிவேர்  –   100 கிராம்
    சப்ஜாவிதை  –  2 தேக்கரண்டி
    தண்ணீர்  – 1 லிட்டர்
    தேன் (அல்லது) பனங்கற்கண்டு  –  தேவைக்கு

    செய்முறை:

    * வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி நீரில் கொட்டி ஐந்து நிமிடம் சிறுதீயில் கொதிக்கவிட்டு, ஆறவையுங்கள்.

    * அத்துடன் சப்ஜாவிதையை கலந்து விதை ஊறியதும் சுவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு கலந்து சுவையுங்கள்.

    * இதை முந்தைய நாள் இரவே தயார் செய்து, மறுநாள் வடிகட்டி பயன்படுத்தவேண்டும்.

    * இது கோடை காலத்திற்கான சிறந்த பானம். நீர் எரிச்சல், வயிற்று புண் நீங்கும். உற்சாகம் பிறக்கும்.
    Next Story
    ×