என் மலர்

  ஆரோக்கியம்

  வரகரிசி வெண்பொங்கல்
  X
  வரகரிசி வெண்பொங்கல்

  வரகரிசி வெண்பொங்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாம் தினமும் சிறுதானிய உணவுகளை அதிகளவில் சேர்த்து கொள்வது நம் உடலை ஆரோக்கியமாக வைக்கும்.
  தேவையான பொருட்கள்:

  வரகரிசி - ஒரு டம்ளர்,
  பாசிப்பருப்பு - அரை டம்ளர்,
  பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்,
  இஞ்சி - சிறிய துண்டு,
  முந்திரிப்பருப்பு - 20,
  மிளகு, சீரகம் - தலா 3 டீஸ்பூன்,
  கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
  எண்ணெய் - அரை குழிக்கரண்டி,
  நெய் - 4 டீஸ்பூன்,
  உப்பு - தேவையான அளவு.

  செய்முறை:

  * வரகரிசி, பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு, பெருங்காயம், உப்பு சேர்த்து, நாலே கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மூன்று விசில் வந்ததும், அடுப்பை ஐந்து நிமிடம் 'சிம்’மில் வைத்து இறக்குங்கள்.

  * அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், நெய் இரண்டையும் ஊற்றி... மிளகு, சீரகம் தாளித்து, இரண்டும் பொரிந்து மேலே வந்தபின், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, முந்திரி சேர்த்துத் தாளித்து, வெந்த வரகரிசி மீது கொட்டி லேசாகக் கிளறினால்... வரகரிசி வெண்பொங்கல் தயார்.

  * இதற்கு சிறந்த சைட் டிஷ் கத்திரிக்காய் கொத்சு அல்லது தேங்காய் சட்னி.
  Next Story
  ×