என் மலர்
ஆரோக்கியம்

வாழைத் தண்டு பொரியல்
வாழைத் தண்டு பொரியல்
வாழைத்தண்டு மிகவும் சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இதை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
வாழைத் தண்டு – 500 கிராம்
பாசிப்பருப்பு–50 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
இஞ்சி– சிறுதுண்டு
பச்சைமிளகாய்– 2
உப்பு – தேவைக்கு
தாளிக்க:
கடுகு–1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு– 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை–சிறிதளவு
தேங்காய் எண்ணெய்– 2 தேக்கரண்டி
செய்முறை:
* வாழைத்தண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாழைத்தண்டையும், பாசிப்பருப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு சிறிது நீர் ஊற்றி, பாத்திரத்தை மூடி வேக வைக்கவும். பாசிப்பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி பொருட்களைக் கொட்டி தாளிக்கவும். அத்தோடு தேங்காய் துருவலை கொட்டி கிளறவும். பச்சை மிளகாய், இஞ்சியை நறுக்கி சேர்க்கவும். வேகவைத்த வாழைத்தண்டு, பருப்பு கலவையை அதில் சேர்த்து, உப்பும் கலந்து கிளறவும். பொரியல் தயார்.
* இதுவும் அதிக சத்து நிறைந்தது.

Next Story