search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    இதயம் பற்றிய சுவாரசியமான உண்மைகள்
    X

    இதயம் பற்றிய சுவாரசியமான உண்மைகள்

    • உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும்.
    • இதயம் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    உயிர் வாழ்வதற்கு முக்கியமான உடல் உறுப்புகளில் ஒன்றாக இதயம் விளங்குகிறது. உயிர் பிரியும் கடைசி நொடி வரை இதயம் துடித்துக்கொண்டிருக்கும். இதயம் செயல் இழந்து போனாலோ, மாரடைப்பு ஏற்பட்டாலோ மரணம் ஆட்கொண்டுவிடும். ஆக்சிஜன் நிறைந்திருக்கும் ரத்தத்தை உடல் முழுவதும் கடத்திச் செல்வதுதான் இதயத்தின் முக்கியமான வேலையாகும். இதயம் பற்றிய மேலும் சில சுவாரசியமான உண்மைகளை தெரிந்து கொள்வோம்.

    * கைவிரல்களை உள்ளங்கைக்குள் மடக்கி வைக்கும் அளவுக்குத்தான் ஒருவரின் இதயம் அமைந்திருக்கும்.

    * இதயம் தினமும் 1 லட்சத்து 15 ஆயிரம் முறை துடிக்கும்.

    * இதயம் ஒவ்வொரு நாளும் சுமார் 7 ஆயிரத்து 570 லிட்டர் ரத்தத்தை 'பம்ப்' செய்யும்.

    * உடலில் இருந்து துண்டிக்கப்பட்டாலும் இதயம் துடித்துக்கொண்டிருக்கும் தன்மை கொண்டது.

    * 'ஓப்பன் ஹார்ட் சர்ஜரி' எனப்படும் இதய அறுவை சிகிச்சை முதன் முதலில் 1893-ம் ஆண்டு நடந்தது.

    * சீரான அளவில் சுருங்கி விரிந்து ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை உடலில் உள்ள செல் களுக்கு கடத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டால் இதயத்தின் செயல்பாடு முடங்கி போய்விடும். இதயம் செயலிழந்து மரணத்திற்கு வித்திடும். இம்மாதிரியான சமயங்களில் 'பேஸ் மேக்கர்' எனப்படும் செயற்கை உயிர் காக்கும் கருவி பயன்படுத்தப்படும். செயற்கையான மின் சமிக்ஞைகள் மூலம் ரத்த ஓட்ட செயல்பாட்டை சரி செய்யும் இந்த 'பேஸ் மேக்கர்' கருவி 1958-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.

    * 'பேஸ் மேக்கர்' கருவியை முதன் முதலில் பொருத்தியவர், ஆர்னே லார்சன். சுவீடனை சேர்ந்த இவர் இந்த கருவியை பயன்படுத்தி 43 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தனது 86-வது வயதில் 2001-ம் ஆண்டு இறந்தார். இதயத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத நோய் பாதிப்புக்கு ஆளாகிதான் அவர் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    * 3,500 ஆண்டுகள் பழமையான எகிப்திய மம்மியில் இதய நோய் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    * பாலூட்டி இனங்களில் திமிங்கலம் மிகப் பெரிய இதயத்தை கொண்டுள்ளது.

    * பெரும்பாலான மாரடைப்புகள் திங்கட் கிழமை நிகழ்கின்றன.

    * மனித இதயத்தின் எடை ஒரு பவுண்டுக்கும் (450 கிராம்) குறைவானது. இருப்பினும் ஆணின் இதயம், பெண்ணின் இதயத்தை விட சுமார் 50 கிராம் எடை கூடுதலாக இருக்கும்.

    * கண்ணின் விழித்திரை (கார்னியா) தவிர உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் இதயத்தில் இருந்து ரத்தத்தை பெறுகின்றன.

    * இதயத்தின் வால்வுகள் திறக்கும்போதும் மூடும்போதும் 'லப் டப்' என்னும் சத்தம் ஏற் படுகிறது.

    * ரத்த நாள அமைப்பு மெல்லிய இழைகளால் ஆனது. அதனை நீட்டித்தால் சுமார் 60 ஆயிரம் மைல்களுக்கு மேல் நீளும்.

    * இதய புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அரிதானது.

    * புன்னகைப்பது இதயத்திற்கு நல்லது. வாய் விட்டு சிரிப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

    Next Story
    ×