search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நீண்டநேர மயக்கம் ஏற்பட காரணங்கள்...
    X

    நீண்டநேர மயக்கம் ஏற்பட காரணங்கள்...

    • மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது.
    • நீண்டநேர மயக்கம் ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

    வலிப்பு நோய், இதய நோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், பக்கவாதம், வெப்பத்தாக்கு, மூளையில் ரத்தக்கசிவு, மூளைக்காய்ச்சல், மூளைக்கட்டி ஆகியவை உள்ளவர்களுக்கு நீண்டநேர மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதய துடிப்பு, ரத்தச்சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் இவ்வகை மயக்கம் வர வாய்ப்பு உண்டு. அதிக அளவில் மது அருந்துவது, போதை மாத்திரைகளை எடுத்துக்கொள்வது, மின் அதிர்ச்சி, மருந்து ஒவ்வாமை, விஷக்கடி, விஷ வாயு, தலையில் அடிபடுதல் போன்ற காரணங்களாலும் நீண்டநேர மயக்கம் ஏற்படலாம்.

    மயக்கம் உள்ளவர்களுக்கு விழிகள் சுழலாது. மயக்கத்தில் உள்ளதுபோல் நடிப்பவர்களுக்கு இமைகளைத் திறந்தால் விழிகள் இங்கும் அங்கும் சுழலும்.

    முதல்முறையாக மயக்கம் ஏற்பட்ட பிறகு உடனடியாக, முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது அவசியம். மயக்கத்துக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது, மீண்டும் மயக்கம் ஏற்படுவதை தடுக்கும்.

    பயம், பதற்றம் போன்ற உளவியல் காரணமாக மயக்கம் வருபவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும்.

    மனபலத்தை உண்டாக்க மருத்துவ ஆலோசனை, தியானம் மற்றும் யோகாசனம் உதவும். பள்ளி மாணவர்கள் காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. வெயிலில் நீண்டநேரம் விளையாடக் கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.

    Next Story
    ×