search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    காபியில் இத்தனை வகையா!
    X

    காபியில் இத்தனை வகையா!

    • மன இறுக்கத்தை போக்குவதற்கு காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    காபி, இந்த வார்த்தையை கேட்டாலே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வரத்தான் செய்யும். சிறுவயதினர் தொடங்கி பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான ஒரு பானம். ஒவ்வொரு நாளும் காலை பொழுது விடிந்து, பல் துலக்கியவுடன் குடிக்கும் சூடான காபி மற்றும் நீண்ட நேர பணி சோர்வுக்கு பிறகு அருந்தும் ஒரு காபி என்பது உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை தரக்கூடியதாக இருக்கிறது. மன இறுக்கத்தை போக்குவதற்கு இந்த காபி உதவியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய காபியில் வித, விதமான காபிகள் இருக்கிறது. இதில் நாமே தயார் செய்து கொள்ளக்கூடிய காபிகள் குறித்து சில தகவல்கள் உங்களுக்காக:

    பிராப்பே

    நீங்கள் வழக்கமாக சாப்பிடும் கோல்டு காபியைக் காட்டிலும் இது நல்ல தேர்வாக அமையும். ஆனால், இதில் கொஞ்சம் ஐஸ் சேர்க்கப்படுகிறது. இன்ஸ்டன்ட் காபி தயார் செய்து, அதில் குளிர்ந்த நீர், சர்க்கரை, பால் ஆகியவற்றை கலந்து இந்த பிரப்பே தயார் செய்கின்றனர். இதை வீட்டிலேயே நாம் எளிமையாக தயார் செய்து விடலாம். அந்த அளவுக்கு இலகுவாக தேவையோ, அந்த அளவுக்கு பிளெண்ட் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கிளாஸ் பொங்கி வழியும் அளவுக்கு பிளெண்ட் செய்தால் சுவை தாறுமாறாக இருக்கும்.

    சாக்கலேட் காபி ட்ரபிள்

    சாக்கலேட் சாப்பிடுவதற்கு அதிக விருப்பம் இல்லாதவர்களுக்கு கூட, அதன் மணம் மிகவும் பிடிக்கும். எனவே நேரடியாக சாக்கலேட் சாப்பிடவில்லை என்றாலும், காபியுடன் அதனை மிக்சிங் செய்து கொள்ளலாம். இது இனிப்பும், கசப்பும் கலந்த சுவையில் இருக்கும்.

    டல்கோனா காபி

    தென் கொரியாவைச் சேர்ந்த டோபி என்ற பான வகை தான் டல்கோனா காபி என்று பரவலாக அறியப்படுகிறது. இதை எப்படி தயாரிக்க வேண்டும் என்றால், சூடான பாலில் சர்க்கரை சேர்த்து, காபியுடன் கலக்கவும், அதனை ஒரு கிளாசில் பாதி அளவுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது மேல் பகுதியில் சில்லென்ற காபியை சேர்த்துக் கொள்ளுங்கள். இரண்டும் கலந்த அனுபவம் நம் மனதை மெய்மறக்கச் செய்யும்.

    திராமிசு

    காபி என்றால், எப்போதுமே அதை பானமாக தான் எடுத்து கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உணவு பொருளாகவும் எடுத்துக் கொள்ளலாம். இத்தாலி உணவு வகையை சேர்ந்த இந்த திராமிசுவில் முக்கிய மூலப்பொருள் காபி ஆகும். க்ரீம், சாக்கலேட், காபி ஆகியவற்றின் காம்பினேஷன் என்பது நம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்லும்.

    பில்டர் காபி

    பில்டர் காபி இந்த வார்த்தையை யாரும் கேட்காமல் இருந்திருக்க முடியாது. மேலும், நீங்கள் நெடுஞ்சாலைகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால், பல இடங்களில் இந்த வார்த்தையைபார்க்க முடிந்து இருக்கும். கசப்பு மற்றும் இனிப்பு, ஆகியவை சரியாக கலந்துள்ள கலவை இது. இதன் மேல் நிற்கும் நுரையே நமக்கு மிகுந்த மணத்தை தரும்.

    Next Story
    ×