என் மலர்

  பொது மருத்துவம்

  எண்ணெய் கொப்பளித்தால் என்ன பலன் தெரியுமா?
  X

  எண்ணெய் கொப்பளித்தால் என்ன பலன் தெரியுமா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மூக்கு, கண்களில் இருந்து நீர் வரும் வரை நன்கு கொப்பளித்து உமிழ்வது சிறந்தது.
  • நல்லெண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

  நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள துணுக்குகள் பல் இடுக்குகளில் சென்று படிந்துவிடும். சில பொருட்கள் பல்லின் பின்பகுதிகளில் காரையாகவும் படிந்து விடும். அந்த உணவு துணுக்குகளில் சில நீரில் கரையக்கூடியவை. சில துணுக்குகள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டவை. காரதன்மை வாய்ந்த உமிழ்நீர் தவறான உணவு பழக்க வழக்கங்களால் அமிலத்தன்மை கொண்டதாக மாறி நோய் தொற்று தோன்ற காரணமாகிவிடுகிறது.

  நல்லெண்ணெய் மற்றும் மூலிகை குடிநீர் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால், உமிழ் நீரின் காரதன்மை பாதுகாக்கப்படும். மேலும் அதில் உள்ள மருத்துவ மூலக்கூறுகள் வாயில் உள்ள மென் திசுக்கள் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலந்து செயல்பட தொடங்கும். தினமும் பதினைந்து மில்லி நல்லெண்ணெயை வாயில் இட்டு பத்து நிமிடங்கள் வாயை நன்கு கொப்பளித்து வந்தால் வாயில் உள்ள அழுக்குகள், பல்லுக்கு இடையில் உள்ள உணவுத் துகள்கள் போன்றவை வெளியேறிவிடும். மேலும் தொண்டை வறட்சி, நாவறட்சி, வாய்புண், நாக்கில் உண்டாகும் புண்கள், உமிழ் நீர் குறைவாக சுரத்தல் போன்ற பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

  பல் ஈறுகளில் ரத்தக் கசிவு, புண், வாய் திசுக்களில் ஏற்படும் புண், நாக்கு பகுதிகளில் உண்டாகும் புண்களுக்கு திரிபலா சூரணம் நிவாரணம் தரும். அதனை 200 மி.லி நீரில் கலந்து சூடு செய்து வடிகட்டி தேன் கலந்து வாய் கொப்பளித்து வரவேண்டும். வாய், நாக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் புண் இருந்தால் மஞ்சள் பொடி, சீரக பொடி போன்றவைகளை ஒரு தேக்கண்டி அளவுக்கு எடுத்து 200 மி.லி. நீரில் கலந்து கொதிக்க வைத்து தேன் கலந்து, வாய் கொப்பளித்து வர வேண்டும். விரைவாக புண்கள் ஆறும்.

  சைனஸ் தொந்தரவால் உண்டாகும் மூக்கடைப்பு, தலைபாரம், தொண்டை வலி, பல் ஈறு வீக்கம் போன்ற பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் லவங்கம், லவங்கப்பட்டை, சுக்கு, மிளகு, மஞ்சள், சீரகம் போன்றவற்றை நீரில் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி வாய் கொப்பளித்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். வாய் கொப்பளிக்கும்போது மூக்கு மற்றும் கண்களில் இருந்து நீர் வரும் வரை நன்கு கொப்பளித்து உமிழ்வது சிறந்தது.

  கட்டுரை: டாக்டர். இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை.

  Next Story
  ×