என் மலர்
பொது மருத்துவம்

வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
- வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம்.
- இதயநோய் வராமல் தடுத்து இதயத்தை பலமாக்க உதவுகிறது.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்கள் இருக்கின்றன. மேலும் இதில் தயோமின், ரிபோபிளேவின், நிக்கோடின் அமிலம், வைட்டமின்-ஏ போன்ற சத்துக்களும் உள்ளன.
உடல் வெப்பத்தை தணிக்க தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் உஷ்ணத்தை குறைக்க உதவுகிறது.
தினமும் வெந்தயம் ஊறவைத்த தண்ணீரை குடிப்பதால் அதில் உள்ள எண்ணெய் பசை முடிகொட்டும் பிரச்சினையை சரிசெய்து முடி அடர்த்தியாக வளர உதவிசெய்கிறது.
வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து அதிகம் இருப்பதால் இது இதயநோய் வராமல் தடுத்து இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது.
வெந்தயத்தில் இருக்கும் கசப்புத்தன்மை சர்க்கை நோயயை கட்டுப்படுத்தவும், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகவும் பயன்படுகிறது.






