search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கருப்பு சாக்லேட்
    X
    கருப்பு சாக்லேட்

    ‘கருப்பு சாக்லேட்’ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

    தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.
    தினமும் இரண்டு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது. சாப்பிட்ட பிறகோ காபி, டீ பருகிய பிறகோ அதனை சாப்பிடலாம். சாக்லேட்டில் கலோரிகள் அதிகம் இருக்கும் என்பதால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.

    கருப்பு சாக்லேட்டில் ஆக்ஸிஜனேற்றிகளின் திறன் மிகுந்திருக்கும். இவை இதய நோய், புற்றுநோய்களில் இருந்து உடலில் உள்ள செல்களை பாதுகாக்கும் திறன் கொண்டவை. தினமும் சிறிதளவு கருப்பு சாக்லேட் சாப்பிட்டு வந்தால் உடலில் ஆக்ஸிஜனேற்றிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல் உடலுக்கு கிடைத்துவிடும்.

    வெளியே செல்பவர்கள் கருப்பு சாக்லேட்டுகளை எடுத்து செல்லலாம். அதிலிருக்கும் பிளவனோல்ஸ் எனப்படும் பையோ ஆன்டிக் மூலக்கூறுகள் சருமத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அதன் காரணமாக சருமத்தில் பொலிவு அதிகரிக்கும். அதனால் வெயில் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.

    சாக்லேட்டில் இருக்கும் கோகோ ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அது மூளையின் செயல்பாட்டையும் மேம்படுத்தும். மேலும் குரல் வளத்திற்கும் இது உதவும்.

    தமனிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு கருப்பு சாக்லேட் உதவுகிறது. மேற்புறத்தில் பாதாம் கலந்த கருப்பு சாக்லேட்டை சாப்பிடலாம். அது பிளாக் காபியுடன் சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும்.

    கருப்பு சாக்லேட்டில் கலக்கப்பட்டிருக்கும் மூலக்கூறுகள் தமனிகளில் கொழுப்பு சேர்வதையும் தடுக்க உதவுகின்றன. அதன் காரணமாக இதய நோய் தாக்கும் அபாயம் குறையும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×