search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புளி
    X
    புளி

    புளியின் மருத்துவ பயன்கள்

    புளி சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
    அறுசுவைகளில் ஒன்று புளிப்புச்சுவை. இதை சரியான அளவில் நமக்கு கொடுக் கும் ஒரு பொருள் தான் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற புளி. சுவைக்காக மட்டுமல்ல சத்துக்களும், மருத்துவ பயன்களும் இதில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புளி பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் கட்டை மரச் சாமான்கள் செய்ய பயன்படுகிறது, இதன் மென்மையான இலைகள் சமையலுக்கு சுவை கூட்டுகிறது.

    100 கிராம் புளியின் - ஊட்டச்சத்து மதிப்பு
    எனர்ஜி-239 கலோரிகள், கார்போஹைட்ரேட்-62.5, கிராம், நார்ச்சத்து-57.4 கிராம், கொழுப்பு-0.6 கிராம், பூரித கொழுப்பு-0.272 கிராம், மோனோசாச்சுரேட்டட்-0.181 கிராம், பாலிஅன்சாச்சுரேட்டட்-0.059 கிராம்.
    2.8 கிராம் புரதத்தின் மதிப்பு
    ட்ரிப்டோபேன்-0.018 கிராம், லைசீன்-0.139 கிராம், மெதியோனன்-0.014 கிராம்

    வைட்டமின்கள்

    தையாமின் (பி1)--37% - 0.428 மி.கிராம்,
    ரிபோளேவின் ((பி2)-13% 0.152 மி.கிராம்,
    நியாசின் (பி3)-13% 1.938 மி.கிராம்
    பான்தோதெனிக் ஆசிட்-3%-0.143 மி.கிராம்
    வைட்டமின் பி6 - 5% - 0.066 மி.கிராம்
    கோலின் - 2% -8.6 மி.கிராம்
    வைட்டமின் சி -4% - 3.5 மி.கிராம்
    வைட்டமின் இ- 1%- 0.1 மி.கிராம்
    வைட்டமின் கே- 3%- 2.8 மி.கிராம்
    கால்சியம் -7%- 74 மி.கிராம்
    காப்பர் -43%- 0.86 மி.கிராம்
    அயர்ன்-22%- 2.8 மி.கிராம்
    மாக்னீசியம் -26%- 92 மி.கிராம்
    பாஸ்பரஸ் -16%- 113 மி.கிராம்
    பொட்டாசியம்- 13%- 628 மி.கிராம்
    செலினியம் -2%-- 1.3 மி.கிராம்
    சோடியம்- 2%- 28 மி.கிராம்
    ஜின்க் -1%- 0.1 மி.கிராம்
    தண்ணீர் 31.40 கிராம்
    உலோக மெருகிடல்

    புளியின் பயன்கள்

    புளிப்பு ஆகாரத்தை ருசிக்கச் செய்யவும் பொருளை பதப்படுத்தவும் பயன்படுகிறது. வைட்டமின் டீ மற்றும் யூ நிறைந்துள்ளது. புளி இலைகளை கொதிக்க வைத்த நீர், ஜுரம் உள்ளவர்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் களைப்பு நீங்க குடிக்க பயன்படுகிறது.

    ஜுரத்திற்கு - பழக்கூழ் சிறிது எடுத்து தண்ணீரில் கலந்து சிறிது சர்க்கரை இட்டு குடித்தால் காய்ச்சலுக்கு நல்லது. இதன் பழக்கூழ் (பல்ப்) மிதமான மல மிளக்கி. இதில் பொட்டாசியம் பைடார்டரேட் இருப்பதால் இது மலமிளக்கியாகவும் செயல் படுகிறது. சிறிது பழக்கூழ் எடுத்து, நிறைய தண்ணீருடன் உண்பதால் இது உடம்பில் உள்ள மலங்களை வெளிக்கொணர்கிறது.

    ஆஸ்துமா

    ஒரு நீளமான மரப்பட்டையை 3 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து (10 நிமிடங் கள்) பெரியவர்கள் - 1 கப், சிறியவர்கள்  1/2  கப், குழந்தைகள் 2 தேக்கரண்டி 1-1-1-1 (4 வேளை) குடிக்க நலம் தரும்.

    புண்களில் இந்த தண்ணீர் விட்டு கழுவினால் ஆறாத புண்களை ஆற்றும் கொப்புளங்கள், தோலில் ஏற்படும் அரிப்புகளுக்கு பயன்படுத்தினால் நல்ல தீர்வு கொடுக்கும். மூட்டுகளில் வீக்கம் இருந்தால் இதை ஒத்தடம் தருவதற்கு பயன் படுத்தலாம்.

    ரத்தம் கலந்து மலம் கழிப்பவர்களுக்கு புளி கலந்து தேநீர் செய்து தருவதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். வாயில் புண் அல் லது தொண்டை கரகரப்பு இருந்தால் புளி தண்ணீரில் வாய் கொப்பளித்தால் நல்ல தீர்வை தரும். ஸ்கர்வி என்று கூறப்படும் வைட்டமின் ‘யூ’ குறைபாடு இந்த புளி - பழக்கூழ் உண்பதால் தவிர்க்கப்படுகிறது. புளி இலைகளை தண்ணீரில் விட்டு அதன் ஆவி பிடித்தால் முடக்கு வாதத்திற்கு நல்ல ஒரு தீர்வாக அமைகிறது.

    இதன் இலைகளை நறுக்கி நீரில் கொதிக்க வைத்து அதை பருகினால், காய்ச்சல் மற்றும் சூடாக சிறுநீர் கழிவது குறையும். நமது நாட்டில் இயற்கையாக வசந்த காலத்தில் கிடைக்கும் தண்ணீரில் பூளோரைடு அதிகம் இருக்கும். இதில் சிறிதளவு புளியை போட்டு வைத்தால் (இரவு முழு வதும்) அடுத்த நாள் குடிக்க உகந்ததாக மாறிவிடுகிறது.

    இலைகளை கசக்கி சாறு எடுத்து குடித்தல் சீத கழிச்சலுக்கு நல்ல தீர்வு. புளியம் பழக்கொட்டைகளை பொடி செய்து தண்ணீரில் கொதிக்க வைத்து பருகுதல் சீத கழிச்சலுக்கு தீர்வு. புளி இலைகளை கஷாயம் இட்டு பருகினால் மஞ்சள் காமாலை, குழந்தைகளுக்கு வயிற்று புழுக்கள், பூச்சிகள் நீங்கும்.

    புளி இலைகளின் மகத்துவம்

    மலேரியா காய்ச்சலில் இருந்து விடுபட வைக்கும். மஞ்சள் காமாலை மற்றும் சர்க்கரை நோயில் இருந்து தீர்வுக்கு வழிவகுக்கும். வைட்டமின் சி குறைபாடு நீங்க உதவும். புண்கள் ஆறும். மார்பில் பால் சுரக்க உதவும். பிறப்புறுப்புகளில் தொற்று நீக்கும். மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை தணிய வைக்கும். உடலை மற்ற தொற்றுகளில் இருந்து காக்கும். புண்களை ஆற்ற ரத்த அழுத்தத்தை குறைக்கும்.

    புளியிலை, ஆவாரை வேர்ப்பட்டை வகைக்கு 35 கிராம், மிளகு கருஞ்சீரகம், வசம்பு, கார்போக அரிசி வகைக்கு 35 கிராம் இவற்றை ஆடுதீண்டாபாலைச் சாற்றிலரைத்து, 350 கிராம் எண்ணெயில் கலக்கி, மூன்று நாள் சூரியனில் வைத்து பின் சொரி, சிறங்கு, கரப்பான் இவைகளின் மீது பூசித் தேய்த்து, 3 மணி நேரத்திற்கு பின்பு தலை முழுகி வர பொடுகு ஆறாத புண்கள் ஆறிவிடும்.

    செஞ்சருமம் என்று கூறப்படும் தோல் பிரச்சினை புளி இலைகளை அரைத்து அதன் மீது போட சரும பிரச்சனைக்கு நல்ல தீர்வு. மரப்பட்டையை கொதிக்க வைத்து குடித்தால் மாதவிடாய் சூதகதடை என்று கூறப்படுவதற்கு நல்ல தீர்வு.

    மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு. இருமல், சளி,- கணையம் பிரச்சனைகள், கல்லீரல் மண்ணீரல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு. வயிற்றுக் கோளாறுகள்,கர்ப்ப காலத்தில் வரும் குமட்டல், வாந்தி, வயிற்றில் புழுக்கள் ஆகியவை நீங்கும். பூவை நசுக்கி சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து கண்ணைச் சுற்றிப் பூசிவர, கண்சிவப்பு மாறும். பழத்தின் மேல் ஓட்டைச் சுட்டுச் சாம்பலாக்கி, சரக்கொன்றைப் புளி முதலியன சேர்த்தரைத்து, ஈரல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். இதை மாவாக்கி களியாய்க் கிண்டிக் கட்டிகளுக்கு வைத்துக் கட்டலாம். தோலைப் பொடித்துத் தூளாக்கிப் பல் துலக்கிவர பல்லிறுகும்.

    பட்டையும், உப்பும் ஒரு மண் சட்டியி லிட்டு எரித்துச் சாம்பலாக்கி அதை ஒரு குன்றி வீதம், தினம் இருவேளை கொடுத்து வர, செரியாமை, குன்மம் நீங்கும். பட்டைச் சாம்பலை நீரில் கலக்கித் தெளிவிறுத்து, வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண் நீங்கும். புளியம்பட்டை, மிளகு, புங்கு இலை, வேலிப்பருத்தி இலை, நாயுருவி இலை இவைகளின் சாம்பல் கால் பங்கு, ஓமம் 4 கிராம் சேர்த்து நீர்விட்டுக்காய்ச்சி, சிறு குழந்தைகளுக்குக் கொடுத்துவர தாகம் அடங்கும்.

    புளிபத்து (செய்முறை)

    புளியை நன்கு கரைத்து கொண்டு அதனோடு சிறிது செம்மண், சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் போது பற்றுபோட மூட்டு வீக்கம், கீல்வாதம், மூட்டுகளில் சவ்வு கிழிதல், மூட்டு ஜுரம் போன்ற நோய்களுக்கு நல்ல தீர்வு.

    உண்ணும் புளியால் இவ்வளவு உன்னத மருத்துவங்கள் செய்ய இயலும் எனும் போது மிகவும் வியப்பாகவே இருக்கின்றது.
    Next Story
    ×