search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடை காலத்தில் அதிகரிக்கும் பக்கவாதம்
    X
    கோடை காலத்தில் அதிகரிக்கும் பக்கவாதம்

    கோடை காலத்தில் அதிகரிக்கும் பக்கவாதமும்- கட்டுப்படுத்தும் உணவுகளும்

    கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயில், வீசும் அனல் காற்றால் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடலாம். சிலவகை எண்ணெய்களும் வெப்ப பக்கவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.
    கோடை காலத்தில் அதிகரிக்கும் வெயிலும், வீசும் அனல் காற்றும் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்ப பக்கவாதம் பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடலாம். உடல் வெப்பநிலை திடீரென 105 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்வது ‘ஹீட்ஸ்ட்ரோக்’ பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். உடல் வெப்பநிலை 107 டிகிரி பாரன்ஹீட்டையும் தாண்டினால் உடல்நிலை மோசமடையக்கூடும். உடனே மருத்துவ உதவியை நாடுவதற்கான அறிகுறியாக அது அமையும்.

    ‘ஹீட்ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு ஆளானால் உடல் உறுப்புகள் கடும் சேதமடையும். உடல் வெப்ப அழுத்தத்திற்குள்ளாவதால் சோர்வு உண்டாகும். மயக்கம், குமட்டல், அதிக வியர்வை, இதய துடிப்பு அதிகரிப்பு, வலிப்பு, சருமம் சிவப்பு நிறத்திற்கு மாறுவது போன்றவை வெப்ப பக்கவாதத்திற்கான அறிகுறிகளாகும். கோடை காலத்தில் நேரடி வெயிலில் அதிக நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்கள் வெப்பத்தை தணிக்க உதவும். சிலவகை எண்ணெய்களும் வெப்ப பக்கவாதத்தை கட்டுப்படுத்த உதவும்.

    யூக்கலிப்டஸ்: இது குளிரூட்டும் தன்மையையும், அழற்சி எதிர்ப்பு பண்பு களையும் கொண்டது. உடலின் வெப்ப நிலையை குறைக்கவும், வெப்ப அழுத் தத்தை எதிர்த்து போடவும் உதவும். ரத்த நாளங்களை திறக்க செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் துணைபுரியும். அதன் மூலம் உடலின் வெப்பநிலையை குறைக்க வும் வழிவகை ஏற்படும். நீரில் சில துளிகள் யூக்கலிப்டஸ் எண்ணெய்யை கலந்து குளிக்கலாம். மேலும் தூங்குவதற்கு முன்பு நீரில் சிறிதளவு யூக்கலிப்டஸ் எண்ணெய் கலந்து போர்வை, தலையணையில் ஸ்பேரே போல் தெளிக்கலாம்.

    மிளகுகீரை எண்ணெய்: ‘பெப்பர்மிண்ட் ஆயில்’ எனப்படும் மிளகுக்கீரை எண்ணெய் இயற்கையாகவே குளிரூட்டும் தன்மை கொண்டது. வெப்ப தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு உடல் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெப்ப அலை உடலின் ஆற்றல் திறனை பாதிக்கும். நீரிழப்பு மற்றும் குமட்டலையும் ஏற்படுத்தும். இத்தகைய வெப்பமான காலநிலையில் மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தி கொடுக்கும். மிளகுக்கீரை எண்ணெய்யை கைகள், கழுத்து, கால்களில் தடவி வரலாம்.

    சந்தன எண்ணெய்: உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தும் தன்மை சந்தன எண்ணெய்க்கு இருக்கிறது. அதிக வியர்வை வெளிப்படுவதையும் கட்டுப்படுத்தும். அதன் நறுமணம் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு தரும். அதனை உடலில் தடவும்போது நரம்புகள் இலகுவாகி மனநிலையை மேம்படுத்தும். மனம் சோர்ந்து போகும்போதெல்லாம் சந்தன எண்ணெய்யை உபயோகிக்கலாம்.

    வெட்டிவேர் எண்ணெய்: இது அசாதாரணமான சூழலிலும் சருமத் திற்கு குளிர்ச்சியூட்டும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை நீரில் சில சொட்டுகள் கலந்து குளித்துவரலாம். நாள் முழுவதும் மனதை அமைதியாக வைத்திருக்க வும், நிதானமாக செயல்படவும் தூண்டும்.
    Next Story
    ×