search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உட்கார்ந்தே இருந்தால்... உடல் நலம் பாதிக்கும்
    X
    உட்கார்ந்தே இருந்தால்... உடல் நலம் பாதிக்கும்

    உட்கார்ந்தே இருந்தால்... உடல் நலம் பாதிக்கும்

    ‘தினமும் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்’ என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் வெளியிட்டுள்ளது.
    ‘தினமும் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக உட்கார்ந்திருந்தால் ஆயுள் குறையும்’ என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வை பிரிட்டிஷ் மெடிக்கல் ஜார்னல் வெளியிட்டுள்ளது.

    * அதிக நேரம் உட்கார்ந்திருப்பது வயதானவர்களை மட்டுமின்றி நடுத்தர வயதினரையும் பாதிக்கிறது.

    * உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு ஈடான உடல் உழைப்பையோ கொண்டிருக்க வேண்டும்.

    * அவை நடப்பது, சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது, மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது போன்றவையாகவும் இருக்கலாம். உடல் உழைப்பு கொண்ட வேலைகள் மிதமான உடற் பயிற்சியில் அடங்கும்.

    * இந்த ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியர் டாம் யேட்ஸ், ‘‘உடல் இயக்க செயல்பாடுகளின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு முந்தைய ஆய்வுகளை விட சிறப்பான முடிவை கொடுத்துள்ளது.

    * அதிக நேரம் உட்கார்ந்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலானது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது’’ என்கிறார். தொடர்ச்சியாக உட்கார்ந்திருக்காமல் அவ்வப்போது எழுந்து நிற்பதும், நடப்பதும் உடலுக்கு நல்லது.
    Next Story
    ×