search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதுகெலும்பு சவ்வு விலகியதை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்
    X
    முதுகெலும்பு சவ்வு விலகியதை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்

    முதுகெலும்பு சவ்வு விலகியதை அறுவை சிகிச்சையின்றி குணப்படுத்தலாம்

    நவீன சிகிச்சை மூலம் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை இன்றி, சவ்வு விலகுதல் பிரச்சினைகளை 95 சதவீதம் வரை பூரணமாக குணப்படுத்த முடியும்.
    முதுகெலும்பு சவ்வு விலகுதல் (டிஸ்க்) பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்ற ஒன்றாகும் முன்பெல்லாம் 40 வயதிற்கு மேல் வந்து கொண்டிருந்த பிரச்சினை இப்போது பள்ளி மாணவர்களையும் பாதிக்க ஆரம்பித்து விட்டது.

    முதுகெலும்பு சவ்வு (டிஸ்க்) என்பது 2 முதுகெலும்பிற்கு இடையே அமைந்திருக்கின்ற வட்டு போன்ற அமைப்பாகும். இது நாம் ஓடும் பொழுதும், குதிக்கும் போதும் வருகின்ற அதிர்வுகளை உள்வாங்கி முதுகு தண்டுவடத்தை பாதுகாக்கின் றது. டிஸ்கின் நடுப்பகுதியில் ஒரு கரு போன்ற அமைப்பு உள்ளது. இது வெளியே தள்ள ஆரம்பிக்கும் போது அருகே இருக்கின்ற தண்டுவடம் மற்றும் அதிலிருந்து புறப்படுகின்ற நரம்புகளை அழுத்துகின்றது. இதன் காரணமாக கடுமையான கழுத்து வலி, முதுகு வலியில் தொடங்கி கை, கால்களுக்கு வலி படர்ந்து செல்லுதல், மரத்துபோதல் மற்றும் கை, கால் செயலிழப்பு ஏற்படுகிறது. டிஸ்க் விலகுகின்ற பகுதியை பொறுத்து, பாதிப்புகளின் தன்மையும் அமைகின்றது.

    முதுகெலும்பு சவ்வு விலகுதல் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு என்ற நிலை இருப்பதால், பலரும் தண்டுவட பகுதி அறுவை சிகிச்சை செய்ய பயந்து, வலியை பொறுத்து கொண்டும், வலி மாத்திரைகளை உட்கொண்டும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தண்டுவடத்தில் அழுத்தம் அதிகப்படும்போது பாதிப்பின் தன்மை அதிகரித்து, கை கால்கள் மரத்து நடக்கமுடியாத நிலைக்கு கொண்டு செல்லும் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.

    இப்போது அறுவை சிகிச்சை இல்லாமலே, நவீனமுறையில், சவ்வு விலகுதல் பிரச்சினையை பூரணமாக சரிசெய்யக்கூடிய சிகிச்சை முறை குருபாதம் முதுகெலும்பு சிகிச்சை மையத்தில் அளிக்கப்பட்டு வருகின்றது.

    முதலில் சவ்வு விலகியதற்கான மூல காரணம் கண்டறியப்படுகின்றது. முதுகெலும்பின் வரிசை ஒழுங்கின்மை சவ்வு விலகுவதற்கு ஒரு முக்கிய காரணியாகும். MRI Scan உதவியுடன் சவ்வு விலகியிருக்கின்ற பகுதியை கண்டறிந்து பின்னர் அமெரிக்க சிகிச்சை உபகரணங்களின் உதவியுடன் நவீன பிசியோதெரபி மருத்துவ முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றது. இதன் மூலம் முதலில் முதுகெலும்பில் ஏற்பட்டுள்ள வரிசை ஒழுங்கின்மை சரிசெய்யப்படுகின்றது. இந்த சிகிச்சை முறையில் வெளியே, பிதுங்கிய நிலையில் இருக்கின்ற சவ்வு, மெதுவாக உள்ளே இழுக்கப்பட்டு, படிப்படியாக தண்டுவடத் தில் ஏற்பட்ட அழுத்தம் முழுவதுமாக சரி செய்யப்படுகின்றது.

    இந்த பிரச்சினையின் தன்மையை பொறுத்து 10 முதல் 15 நாட்கள் வரை சிகிச்சை மற்றும் 1 முதல் 2 மாதம் வரை ஓய்வும் அவசியம். இந்த நவீன சிகிச்சை மூலம் எவ்வித பக்க விளைவுகளும் இல்லாமல் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை இன்றி, சவ்வு விலகுதல் பிரச்சினைகளை 95 சதவீதம் வரை பூரணமாக குணப்படுத்த முடியும். டிஸ்க் பிரச்சினையால் அவதிப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் இந்த சிகிச்சைமுறை அற்புதமான தீர்வு

    உண்மையான வலி நிவாரணத்தை பெற்று வலியில்லா வாழ்க்கை வாழுங்கள்.

    இவ்வாறு டாக்டர் ராபின் குருசிங் கூறினார்

    குருபாதம் மருத்துவமனைDr.B.ராபின் குருசிங்
    Next Story
    ×