search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சிவனுக்கு அபிஷேகம்
    X
    சிவனுக்கு அபிஷேகம்

    அற்புதப் பலன்தரும் அபிஷேகங்கள்

    உங்கள் ஜாதகத்திற்கு உகந்த பொருட்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் நல்எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.
    ‘பரிகாரங்கள்’ என்ற கருணை மனுவை, படைத் தவனுக்கு நீங்கள் செலுத்தும் பொழுது ‘அனு கூலங்கள்’ என்ற அற்புதப் பலன்கள் உங்களுக்கு கிடைக்கத் தொடங்குகிறது. சத்தியவான் இறந்துபோன பின்பு, சாவித்திரி எமதர்மராஜாவிடம் வாதாடி அவனது உயிரை மீட்ட கதையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதுபோல ஒரு பெண், தன் கணவனின் உயிரைக் காக்க, சூரிய உதயத்தையே கட்டுப்படுத்தி வைத்த கதையையும் நீங்கள் படித்திருப்பீர்கள்.

    ‘விதி’ என்று ஒன்று இருந்தால் ‘விலக்கு’ என்றும் ஒன்று இருக்கும். அதைத்தான் ‘விதிவிலக்கு’ என்று சொல்கிறோம். ஒரு காரியாலயத்திற்கு நாம் செல்கின்ற போது அங்கு நீண்ட வரிசை நிற்கிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தனை பேரும் அங்கு வரிசையாகச் செல்வதுதான் விதிமுறை என்று சொல்வார்கள்.

    அதே நேரத்தில் அங்கு ஒரு வி.ஐ.பி. வந்தால், அவரை மட்டும் வரிசையில் நிறுத்தாமல் உள்ளே அழைத்துச்செல்வார்கள். எல்லோரும் அவரைப் பார்த்து ‘அவருக்கு மட்டும் என்ன விதி விலக்கு’ என்று கேட்பார்கள். காரணம் அவர் ‘புகழ்’ பெற்றவர். அதைப்போல நீங்களும் இறைவனின் அருள்பெற்றவராக விளங்கினால், உங்களுக்கும் விதிவிலக்கு கிடைக்கும். அந்த இறையருளைக் கொடுப்பதே வழிபாடுகளும், பரிகாரங்களும்தான்.

    வாழ்க்கையில் வசந்தத்தை வரவழைத்துக்கொள்ள வேண்டுமானால், ‘வழிபாடு’ என்ற நான்கு எழுத்துத்தான் உங்களுக்குத் தேவை. அந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்கின்ற பொழுது ஆண்டவனை நீங்கள் அலங்கரித்துப் பார்க்க வேண்டும். அபிஷேகம் செய்து பார்க்க வேண்டும். ஆபரணங்களைச் சூட்டியும் அலங்கரிக்கலாம். அழகிய மலர்களைச் சூட்டியும் அலங்கரிக்கலாம். நம்மால் இயன்ற வஸ்திரங்களை அணிவித்தும் அழகு பார்க்கலாம்.

    கல்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். வில்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். சொல்லால் அடித்து வழிபட்டவனுக்கும் காட்சி தந்தவன், இறைவன். எல்லோருக்கும் இறைவன் காட்சிதர வேண்டுமானால், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். பக்தியை நீங்கள் பக்தியாகக் கொள்ள வேண்டும்.

    நாம் இறைவன் இருக்கும் ஆலயங்களை நோக்கி நடந்து செல்கிறோம். ஆனால் அந்த இறைவனோ அறுபத்து மூன்று நாயன்மார்களின் இல்லத்தை நோக்கி அடியெடுத்து வைத்தவன். இல்லத்தை நோக்கி வரும் இறைவன் நம் உள்ளத்தையும் நோக்கி வர வேண்டுமானால், நல்லதைச் சொல்ல வேண்டும், நல்லதைச் செய்ய வேண்டும்.

    அபிஷேகத்தில் கூட அர்த்தத்தைப் பதித்து வைத் திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். நமக்கு என்ன குறை இருக்கின்றதோ, அதற்குரிய விதத்தில் உள்ள பொருளை இறைவனுக்கு அர்ப்பணித்தால் நமது கோரிக்கைகள் நிறைவேறுவதை அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.

    அந்த அடிப்படையில் இறைவனுக்கு பாலால் அபிஷேகம் செய்தால் ஆயுள் விருத்தியடையும்; ஆரோக்கியம் சீராகும். பன்னீரால் அபிஷேகம் செய்தால் சந்தோஷங் களைச் சந்திப்பீர்கள். தயிரால் அபிஷேகம் செய்தால் புத்திர பாக்கியம் வாய்க்கும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். இளநீரால் அபிஷேகம் செய்தால் உள்ளம் மகிழும் வாழ்வு அமையும். தண்ணீரால் அபிஷேகம் செய்தால் எண்ணிக்கைக்கு ஏற்ற விதம் எண்ணங்களை நிறைவேற்றும். தேனால் அபிஷேகம் செய்தால் நல்ல குரல் வளத்தைப் பெறலாம்.

    சந்தனாதி தைலம் - சுகமான வாழ்வு அமையும்.

    திருமஞ்சனப் பொடி - கடன்சுமை குறையும்.

    நெய் - ஞான மார்க்கம் சித்திக்கும்.

    எலுமிச்சைப் பழம் - பகை நீங்கும்,

    எதிரிகள் உதிரிகளாவர்.

    விபூதி - மோட்சம் பெற வழி பிறக்கும்.

    சொர்ணம் - தொழிலில் லாபம் பெருகும்.

    சர்க்கரை - எதிரிகள் விலகுவர்.

    அன்னாபிஷேகம் - சகல பாக்கியம் கிடைக்கும்.

    இப்படி இறைவனுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் அற்புதமான பலன்களை நாம் காணலாம். குறிப்பாக பிரதோஷ காலத்தில் சிவதூதன் என்று வர்ணிக்கப்படும் நந்தியெம்பெருமானுக்கு சகல அபிஷேகமும் நடைபெறும். அப்போது உங்கள் ஜாதகத்திற்கு உகந்த பொருட்களைக் கொடுத்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உங்கள் நல்எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

    சிவப்பிரியா
    Next Story
    ×