என் மலர்

    ஆரோக்கியம்

    பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?
    X

    பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்க உதவுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உருவாக்கப்பட்டுள்ள பிட்னஸ் டிராக்கர் உடல் எடையைக் குறைக்குமா என்பதை கீழே பார்க்கலாம்.
    ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், ‘பிட்னஸ் டிராக்கர்’ என்ற சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பலரும் ஆர்வத்தோடு பயன்படுத்தத் தொடங்கியிருக்கும் நிலையில், இச்சாதனம் உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுகிறதா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

    கையில் அணியக்கூடிய ‘பிட்னஸ் டிராக்கர்’, தூக்கத்தின் தன்மை, உடற்பயிற்சிகளின் தன்மை, உடலில் எரிக்கப்படும் கலோரிகள் போன்றவற்றைக் கண்காணிக்க உதவுகிறது.

    ஆனால் இந்தச் சாதனம், உடல் எடையைக் குறைக்க ஒருபோதும் உதவாது என்று ஓர் ஆய்வு கூறுகிறது.

    இது தொடர்பான ஆய்வை அமெரிக்க மெடிக்கல் அசோசியேஷன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தது.

    இந்த ஆய்வில், உடல் எடை அதிகம் உடைய 500 பேர் தாங்களாக முன்வந்து பங்கேற்றனர்.

    ஆய்வுக்குப் பின் கருத்துத் தெரிவித்த இந்த ஆய்வுக் குழுவின் தலைவர், ‘இன்று மக்கள் உடல் எடையைக் குறைக்க உதவும் சாதனங்கள் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர்’ என்று கூறியிருக்கிறார்.

    ‘பிட்னஸ் டிராக்கர்’ போன்ற சாதனங்கள், உடலின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
    Next Story
    ×