என் மலர்
ஆரோக்கியம்

உப்பு உருவாக்கும் கெடுதல்கள்
ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது.
ஆதிகால மனிதன் தனது உணவில் உப்பை மிக மிகக் குறைவாகவே பயன்படுத்தி வந்தான். ஒரு வாரத்திற்கு 250 மில்லி கிராம் உப்பு என்ற அளவிலேயே அவனது உபயோகம் இருந்தது. இந்த அளவுகோல் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது. இதெல்லாம் மேலைநாடுகளின் கணக்கு. நம் நாட்டின் நிலைமையை கேட்கவே வேண்டாம். சுமார் 10 ஆயிரம் மில்லி கிராம் உப்பைச் சேர்த்து உணவை விஷமாக்கி வருகிறார்கள் நம் நாட்டினர்.
உப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமல்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப்படுகின்றன.
இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள். உப்பு உடலில் அதிகமாகும் போது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றால், உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும் என்கிறார்கள்.
இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருந்தால் புரைநோய் வேகமாக பரவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ் கிரீமில் ‘சோடியம் அல்கினேட்‘ என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள், விரைவாக கெடுகின்றன. சரியாக ஷீரணிக்க இயலாத கடல் உப்பை மனிதன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்துவதால் அவை நரம்புகளில் எரிச்சலை தந்து, வயிற்றில் உள்ள பாதுகாப்பு ஜவ்வுகளை அரித்து விடுகிறது. இதனால் மனிதன் குடல் புண் நோய்க்கு ஆளாகிறான்.
இப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவு உள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பது இந்த காரணங்களுக்காகத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story