search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கல்லீரலைக் காப்பது அவசியம்
    X

    கல்லீரலைக் காப்பது அவசியம்

    கல்லீரல் கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது.
    நம்மூர் குடிமகன்கள் எப்போதும் படு தில்லானவர்கள். எவ்வளவு குடித்தாலும் நான் ஸ்டெடியாக நிற்பேன் என்ற டயலாக் எல்லா குடிகாரர்களிடமும் இருக்கும். மது குடிப்பவர்களிடம் நடைபெறும் மிகப் பெரும் போட்டியே இதுதான். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று இந்த ஸ்டெடி மனிதர்கள் எவ்வளவு அபாயத்தில் இருக்கிறார்கள் என்று கூறுகிறது.

    இப்படி மல்லுக்கட்டி மது குடிக்கும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே ஒரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடி கூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும். உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம்.

    அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல். மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது. உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது.

    இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவல் அனுப்பும். பதறிப்போன கல்லீரல் நொடிப் பொழுதில் ரத்தம் வெளியேறும் இடத்திற்கு ‘ப்ரோத்ரோம்பின்‘ என்ற ரசாயனத்தை அனுப்பி வைக்கும்.

    அந்த ரசாயனம் ரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு சிலந்தி வலைப் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி ரத்தத்தை உறைய செய்துவிடும். இதனால் ரத்த வெளியேற்றம் தடுக்கப்படுகிறது. கல்லீரல் மட்டும் இந்த வேலையை செய்யவில்லை என்றால் ஒரு சின்ன காயம் போதும் நம்மைக் கொல்வதற்கு. ஆமாம், ரத்தம் உறையாமல் முழுவதும் வெளியேறினால் அடுத்த நொடி மரணம் தான்.

    மதுவில் உள்ள ஏராளமான விஷத்தன்மையை போக்குவதற்காக இரவு முழுவதும் கல்லீரல் போராடுகிறது. கல்லீரல் விஷத்துக்கு எதிராக போராடும் வரை தான் குடிகாரர்கள் எவ்வளவு குடித்தாலும் அசராமல் நிற்பேன் என்று வசனம் பேச முடியும். கல்லீரல் கெட்டு விட்டது என்றால் அவரால் ஸ்டெடியாக மூச்சு கூட விட முடியாது.

    அப்புறம் எங்கு வசனம் பேசுவது. தொடர்ந்து குடிக்க, குடிக்க மது எனும் விஷத்தோடு கல்லீரல் ஓயாமல் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கல்லீரல் படுத்துக் கொண்டால் அவ்வளவுதான் அதன்பின் அது எழுந்திருக்கவே எழுந்திருக்காது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதனால் மதுவை மறந்து கல்லீரலை காத்து உடல் ஆரோக்கியம் பெறுவோம்.
    Next Story
    ×