search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்
    X

    உடலுக்கு தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

    நீங்கள் உடலுக்கு தேவையான அளவு சாப்பிடுவதில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம்.
    நாள் முழுதும் மொபைலை நோண்டுவத்றகு தேவையான சார்ஜ் செய்யும் நாம். நமது உடலுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தேவையான அளவு சாப்பிடுகிறோமா என்பதை மறந்துவிடுகிறோம். சிலர் டயட் என்ற பெயரிலும், சிலர் அவசரகதி வாழ்க்கையின் பெயரிலும் சரியான அளவு உணவு உண்பதே கிடையாது.

    இதனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல தீய மாற்றங்கள் உண்டாகின்றன. உடல் சோர்வு, வளர்சிதை மாற்றத்தில் தாக்கம், மலச்சிக்கல், கோபம் என உங்களுக்கே தெரியாமல், அன்றாடம் நீங்கள் எதிர்க் கொள்ளும் உடல்நல பிரச்சனைகளுக்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். இனி, நீங்கள் உடலுக்கு தேவையான அளவு சாப்பிடுவதில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்...

    நீங்கள் உடலுக்கு தேவையான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ளவிட்டால், நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்ய தேவைப்படும் உடற்சக்தியும் கிடைக்காது. இதனால், நாள் முழுவதும் உடற்சோர்வாக இருப்பது போன்று உணர்வீர்கள்.

    உடல் எடையில் மாற்றங்கள் தென்படும். ஆனால், இந்த மாற்றங்கள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். உண்ணா நோம்பு இருப்பது வேறு, சரியான அளவு உணவு சாப்பிடாமல் இருப்பது வேறு.

    வாரத்திற்கு ஒருநாள் விரதம் இருப்பது உடல் உறுப்புக்கள் இலகுவாக உணர, அவற்றின் செயற்திறன் அதிகரிக்க உதவும். ஆனால், வாரம் முழுக்க சரியான அளவு உணவு உண்ணாமல் இருப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.

    தினமும் மலச்சிக்கல் ஏற்படும். அளவுக்கு அதிகமாக உண்டால் மட்டுமல்ல, அளவுக்கு குறைவாக உண்டாலும் மலச்சிக்கல் உண்டாகும். சரியான அளவு நீர் அருந்தலாம், உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் கூட மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

    இடைவேளைகளில் அதிகமாக பசி எடுக்கும். உணவு வேளைகளுக்கு மத்தியில் ஏதேனும் சிறுதீனி உண்ணலாமா என அலைபாய்வீர்கள். இப்படி அடிக்கடி பசி எடுப்பதும், நீங்கள் சரியான அளவு உணவு உண்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறி தான்.

    நீங்கள் சரியான அளவு உண்பதில்லை என்பதை வெளிக்காட்டும் மற்றுமொரு அறிகுறி கோபம். ஆம், சரியான அளவு நீங்கள் உணவு உட்கொள்ளவில்லை எனில், உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கோபம் அதிகரிக்குமாம்.

    சிலருக்கு சரியான நேரத்தில் உணவு அவரது தட்டுக்கு வரவில்லை எனில், கோபம் வந்து தாட்டுப்பூட்டு என கத்துவார்கள். அதற்கு காரணம் இந்த ஹார்மோன் மாற்றங்கள் தான்.

    சிலர் டயட் என்ற பெயரில் மிக குறைவான அளவு உணவு உட்கொள்வார்கள். இது, உங்கள் உடல்நலனை உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து நீங்களே இழப்பதற்கு சமம். எனவே, அளவு குறைவாக இருந்தாலும், ஊட்டசத்து நிறைந்த உணவாக உண்ண வேண்டியது அவசியம்.

    நீங்கள் சரியான அளவு உணவு உட்கொள்ளவில்லை எனில், அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். இதை வைத்து நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையான அளவு உணவு உட்கொள்வதில்லை என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.
    Next Story
    ×