என் மலர்

  ஆரோக்கியம்

  எடையைக் குறைப்பது எப்படி?
  X

  எடையைக் குறைப்பது எப்படி?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உடல் எடை கூடக்கூட, கூடவே பல்வேறு உடல்நல பாதிப்புகளும் படை யெடுத்து வந்துவிடுகின்றன. எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
  உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் அவதிப்படுபவர்கள் ஒரு பக்கம் என்றால், அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள் மறுபக்கம்.

  உடல் எடை கூடக்கூட, கூடவே பல்வேறு உடல்நல பாதிப்புகளும் படை யெடுத்து வந்துவிடுகின்றன. எனவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது பலரின் எண்ணமாக உள்ளது.

  அதற்கு உதவும் சில குறிப்புகள்...

  தினமும் ஏதாவது ஒரு பழச்சாறு பருகுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அந்தப் பழச்சாறு, புதிதாக தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்ப்பதைத் தவிர்க்கவும். சர்க்கரை சேர்ப்பது, பழத்தின் சத்தைக் குறைந்துவிடும்.

  எண்ணெய் அதிகம் சேர்த்துத் தயாரிக்கப்பட்ட, பொரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

  வேகவைத்த பயறு வகைகள், தானியங்கள், காய்கறிகளுக்கு நமது உணவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

  வேகவைத்த உணவுகள் நல்லது என்றாலும், இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளையும் ஓர் அளவோடு சாப்பிடுவது நல்லது.

  உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காரத்துக்கு, பச்சை மிளகாய்க்குப் பதில் மிளகு சேர்க்கலாம்.

  மாலை வேலையில் சுவையான நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்து, வேகவைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடலாம். அவ்வப்போது, பலவகை பழங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பழக்கலவையை (புரூட் சாலட்) உண்ணலாம்.

  காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால் உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும், உடலுக்குப் புத்துணர்ச்சியும், ஆற்றலும் கிடைக்கும்.

  சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டால் முதலில் பழம்தான் செரிமானம் ஆகும். உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும்.

  உட்கொண்ட உணவுகள் செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும். அதனால், சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்துக்குப் பின்போ பழங்கள் சாப்பிடுவதுதான் சரியான முறை.

  பழங்களை கூடுமானவரை பழச் சாறாக அல்லாமல் அப்படியே சாப்பிடலாம். அதன்மூலம், பழங்களின் சத்துகளும், நார்ச்சத்தும் முழுமையாகக் கிடைக்கும்.
  Next Story
  ×