என் மலர்

  ஆரோக்கியம்

  இதயத்தை எப்படிக் காக்கலாம்?
  X

  இதயத்தை எப்படிக் காக்கலாம்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுறுசுறுப்பான வாழ்க்கை முறைதான் இதயம் காக்கும் கவசம்.
  இன்று பெரும்பாலானோர் பொருள் ஈட்டுவதில் காட்டும் ஆர்வத்தை, தங்கள் உடம்பைப் பேணுவதில் காட்டுவதில்லை.

  ‘இது அவசர யுகம்’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டு ஓடிக்கொண்டே இருக்கும் நாம், ஆரோக்கியம்தான் அனைத்துக்கும் அடிப்படை என்பதை மறந்துவிடுகிறோம்.

  அதிலும் முக்கியமாக, நமது ரத்த ‘பம்பிங் ஸ்டேஷன்’ ஆன இதயத்தின் ஆரோக்கியம் காப்பதன் அவசியத்தை நாம் அவ்வளவாக உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இதயம் முடங்கும்போது அது உயிர் ஆபத்தையே ஏற்படுத்திவிடுகிறது.

  சரி, துடித்துக்கொண்டே இருக்கும் இதயத்தை எப்படிக் காப்பது? இதோ இந்த வழிகளைப் பின்பற்றலாம்...

  ஆப்பிள், மருத்துவரை நெருங்கவிடாமல் தடுக்கும் என்று கூறுவார்கள். ஆப்பிள் இதயத்துக்கும் மிகவும் நல்லது. இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். எனவே அன்றாடம் ஆப்பிள் சாப்பிட்டு வரலாம்.

  கீரைகளில் இதயத்துக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் உள்ளன. எனவே தினமும் உணவில் ஒரு கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

  முழு தானியங்களை அதிக அளவில் அன்றாட உணவில் சேர்க்கலாம். சிவப்பு அரிசியும் உடலுக்கு வலுச் சேர்க்கும், இதயத்தைப் பாதுகாக்கும்.

  ஓட்சில் நார்ச்சத்துகள் அதிகம். இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதுடன், ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். இதயநோய் வராமல் தடுக்க உதவும்.

  பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ‘ஈ’ உள்ளது. இது உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும். இதயநோய் நெருங்காமல் தடை போடும்.

  தினமும் மாதுளம் பழச்சாறு பருகுவதும் இதயநோயில் இருந்து நம்மைக் காக்கும்.

  ஸ்டிராபெர்ரி, புளூபெர்ரி போன்ற பழவகைகளில் அதிக அளவு வைட்டமின் ‘சி’, கால்சியம், பீட்டா கரோட்டின் சத்துகள் உள்ளன. தினமும் காலையில் ஓட்சுடன் புளூபெர்ரி பழம் சாப்பிட்டால் இதயம் சீராக இயங்கும்.

  சோயா, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயநோய் வருவதைத் தடுக்கிறது. காலையில் பாலுக்குப் பதில் சோயா பாலை அருந்தினால் இதயம் வலுப்பெறும்.

  உப்பு, இதயத்துக்கு எதிரி. உப்பு போட்ட கடலையைக் கொறிக்கும்போதெல்லாம் இதயம் குறித்து கொஞ்சம் யோசியுங்கள்.

  ‘டீ’யில் உள்ள பிளேவனாய்டுகள் ரத்த நாளங்களை மேம் படுத்தி அவற்றை ஓய்வெடுக்க வைக்கும். இதயத்தின் நலம் காக்க தினமும் இரண்டு கப் டீ பருகலாம்.

  சாக்லேட்டும் இதயத்துக்கு நன்மை பயக்கிறது. ஆனால் மில்க் சாக்லேட்டை காட்டிலும், டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட்டின் கோக்கோவில் பிளேவனாய்டுகள் அதிகம் உள்ளதால் அவை ரத்த உறை தலைத் தடுக்கும்.

  இதயத்தைப் பாதுகாக்கும் சிறந்த வழிகளில் ஒன்று, நீச்சல் பயிற்சி. நீச்சல் அடிக்கும்போது இதயம் சுறுசுறுப்பாகச் செயல் படும். அது இதயத் துடிப்புக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும்.

  தியானக் கலையின் மூலம் நரம்பியல் அமைப்பை சாந்தப்படுத்தினால் அது இதய வால்வு, இதயச் சுவர் பாதிப்பில் இருந்து காக்கும்.

  வைட்டமின் பி அடங்கிய உணவுகள் இதயத்துக்கு மிகவும் நல்லது. அவை இதய நோய்களை அண்ட விடாமல் தடுக்கும். அவகேடோ மற்றும் கடல் உணவுகள், வைட்டமின் பி அடங்கிய உணவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

  சில நேரங்களில், நரம்பியல் அமைப்பைச் சாந்தப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டால், அது இதயத்துக்கு நன்மையை விளைவிக்கும். உதாரணமாக, மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடலாம்.

  இதய ஆரோக்கியத்துக்கு, கோதுமை ரொட்டியும் உதவும். அதோடு, ‘நட்ஸ்’ எனப்படும் பருப்பு வகைகளும் மனித உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் சிலருக்கு சிலவகை பருப்பு வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதை அறிந்து பயன்படுத்துவது நல்லது.

  எல்லாவற்றுக்கும் மேலாக, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைதான் இதயம் காக்கும் கவசம். அதிகாலையிலேயே எழுந்து, நடை, மெல்லோட்டம், உடற்பயிற்சி என்று சுறு சுறுப்பாக நாளைத் தொடங்குவது நல்லது.

  Next Story
  ×