search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும்
    X

    ஆண்கள் தினமும் செய்யும் இந்த செயல்கள் விந்தணுவை அழிக்கும்

    ஆண்கள் அன்றாடம் செய்யும் சில செயல்கள் அவர்களின் விந்தணுவை அழிக்கும் தன்மை கொண்டவை.
    ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் பெண்கள் மட்டுமில்லைஆண்களும் தான். பல இடங்களுக்கு செல்லும் ஆண்களுக்குத் தான் பல்வேறு பழக்கங்கள் இருக்கும். இத்தகைய பழக்கங்களால் விந்தணுவானது அழிக்கப்படுகிறது. இப்போது விந்தணுவை அழிக்கும் செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

    அளவுக்கு அதிகமான சுடுநீரில் ஆண்கள் குளித்தால், எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வேண்டிய ஆண்களின் விரைகளானது வெப்பமடைந்து, விந்தணுவின் உற்பத்திக்கு தடையை ஏற்படுத்துவதோடு, அழிக்கவும் செய்யும். எனவே எப்போதும் ஆண்கள் மிகவும் சூடான நீரில் குளிர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
     
    இன்றைய வேலைப்பளு மிக்க உலகில் ஓடியாடி வேலை செய்வதெல்லாம் போய், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை தான் அதிகம் உள்ளது. இப்படி எப்போதும் உட்கார்ந்தவாறே இருப்பதால், உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல், உடல் பருமனாகிவிடுகிறது.

    இப்படி உடல் பருமனாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தியானது தடைப்படும். ஆகவே ஆண்கள் தினமும் தவறாமல் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்து, உண்ணும் உணவில் கவனத்தை செலுத்த வேண்டும். இதனால் திருமணத்திற்கு பின் கருத்தரிப்பதில் பிரச்சனை வருவதைத் தடுக்கலாம்.
     
    மொபைலை ஆண்கள் எப்போதும் தங்கள் பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், மொபைலில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் அதிர்வுகளால் விரைகள் பாதிக்கப்பட்டு, விந்தணுவின் உற்பத்தியைத் தடுக்கிறது. ஆகவே எப்போது மொபைலை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
     
    ஆய்வு ஒன்றில் ஆண்கள் உள்ளாடையை மிகவும் இறுக்கமான அணிவதால் விந்தணுவின் உற்பத்தி தடைபடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அலும் இறுக்கமான உள்ளாடையை நீண்ட நேரம் அணியும் போது, ஆண்களின் விரைகளானது வெப்பமடைந்து, விந்தணுக்களை அழிக்கிறது. ஆகவே ஆண்கள் எப்போதும் நன்கு தளர்வாக இருக்கும் உள்ளாடையை அணியும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

    ஆல்கஹாலானது ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு உதவும் ஜிங்க் சத்தை உடல் உறிஞ்சாமல் தடுக்கும். அதனால் உங்களுக்கு குழந்தை வேண்டுமெனில், இதனைக் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
    Next Story
    ×