என் மலர்

  ஆரோக்கியம்

  ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும்
  X

  ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும். இரு பாலினமும் ஒன்றுதான் என்ற சமநிலை உருவாக வேண்டும்.
  ஆண், பெண் விகிதத்தை பாலின விகிதம் என்கிறார்கள். இதன்படி ஆயிரம் ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளார்கள் என்பதே பாலின விகிதம். நமது இந்தியாவை பொறுத்தவரை ஆயிரம் ஆண்களுக்கு 944 பெண்கள் இருக்கிறார்கள்.

  அதனால் பெண்கள் குறைவாக உள்ள நாடாகவே இந்தியா கருதப்படுகிறது. இதுவே உலக அளவில் பார்த்தால் குழந்தைப் பிறப்பின்போது 1000 ஆண்களுக்கு 934 பெண் குழந்தைகளே பிறக்கின்றன.

  இந்த குறைவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதும், மனித சமூகம் பெண் குழந்தைகளை வெறுப்பதே பெரும் காரணமாக இருக்கிறது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறியும் ஸ்கேன் கருவிகள் வந்த பின்பு உலக அளவில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து இருப்பது பெரும் அதிர்ச்சி.

  பாலின விகிதம் மனிதர்களில் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களிலும் கூட கணக்கிடப்படுகிறது. பாலின விகிதம் உயிரினங்களின் ஆயுட்காலத்தைப் பொறுத்து மாறுகிறது. இது பொதுவாக நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.

  முதல் பிரிவு முதன்மை பாலின விகிதம் என்பது. இது கருத்தரிப்பின் போது உள்ள பாலின விகிதத்தைக் குறிக்கிறது. இரண்டாம் நிலை பாலின விகிதம் என்பது பிறப்பின் போதுள்ள பாலின விகிதத்தை குறிக்கிறது.

  மூன்றாம் நிலை பாலின விகிதம் என்பது பருவ வயதில் இனச் சேர்க்கைக்கு தகுதியுள்ள உயிரினங்களை குறிக்கிறது. அதாவது வயதுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை. நான்காம் நிலை என்பது இனப் பெருக்க காலம் முடிந்த பின் வாழும் உயிரினங்களின் பாலின விகிதத்தை குறிப்பதாகும். அதாவது வயதானவர்களின் பாலின விகிதம்.

  இந்த பாலின விகிதத்தை துல்லியமாக கண்டறிய இன்னும் ஆய்வு முறைகள் வரவில்லை. அதிலும் இந்தியா போன்ற பெண் குழந்தைகளை வெறுக்கும் நாட்டில் கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள தடை உள்ளது.

  இதனால் நம் நாட்டில் முதல் நிலை பாலின விகிதம் என்பது செயல்படுத்தப்பட முடியாமலே போய்விடுகிறது. அதனால் துல்லியமான பாலின விகிதத்தைக் கணக்கிட இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். அதற்கு ஆண், பெண் பாலின வேறுபாடு மறைய வேண்டும். இரு பாலினமும் ஒன்றுதான் என்ற சமநிலை உருவாக வேண்டும். அப்போதுதான் இது சாத்தியம்!
  Next Story
  ×