என் மலர்

  ஆரோக்கியம்

  இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்
  X

  இருதயம், சிறுநீரகத்தை பாதுகாக்கும் மண்ணீரல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனித உடலில் இயங்க கூடிய உள் உறுப்புகளில் ஒன்றான மிக முக்கியமான மண்ணீரல் பற்றி பார்ப்போம்.
  மண்ணீரலானது கல்லீரல் அருகில் உள்ளது. இது மனிதனின் ரத்தத்தை சுத்தம் செய்யும் பணியை செய்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து மனிதன் நோயின்றி வாழ மண்ணீரல் உதவுகிறது. உடலில் உள்ள 25,00,000 வியர்வை பைகளின் வியர்வை சுரப்பிகளையும் தூண்டி விடுகிறது. வியர்வை மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளும், உப்புகளும் வெளியேற்றப்படுகிறது.

  பழைய சிவப்பணுக்களை அழித்து புதிய சிவப்பணுக்களை உருவாக்குகிறது. அவரவர் உடலுக்கும் வயதுக்கும் ஏற்றாற்போல் தேவையான சிவப்பணுக்களை உருவாக்கி சரியான முறையில் சீரான அளவில் சிவப்பணுக்களை வைத்துக் கொள்கிறது. அதே போல் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கிருமிகளை அழித்து விடுகிறது.

  72,000 நரம்புகளின் ரத்த ஓட்டப் பாதையை சீராக்குகிறது. உள் உறுப்பான இரைப்பையுடனும் வெளிப்புற உணர்வு உறுப்பான வாயுடனும் மண்ணீரல் தொடர்புடையது. மண்ணீரல் சீராக இயங்கினால் இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், இரைப்பை ஆகியவை சீராக இயங்கும். அத்துடன் உடலுக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

  கல்லீரலை போலவே மண்ணீரலும் பித்த நீர் சுரப்பை உருவாக்குகிறது. ஒருவர் நினைத்த எண்ணங்களை செயல்படுத்த வேண்டுமானால் மண்ணீரல் சிறப்பாக இயங்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் இல்லாமை, மலச்சிக்கல் போன்ற காரணங்களால் மண்ணீரல் பாதிக்கப்படும். மண்ணீரல் பாதிக்கப்பட்டால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம், இருதயம்.

  மண்ணீரல் பாதிப்பை வர்மகலை மருத்துவத்தால் சரி செய்ய முடியும். மண்ணீரல் தொடர்புடைய வர்மபுள்ளி வெள்ளீரல் வர்மப்புள்ளியாகும். இதற்கு அடுத்தப்படியாக தொடர்புடையது பள்ள வர்ம புள்ளியாகும். இந்த இரு வர்ம புள்ளியை தூண்டுவதால் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும்.

  மனித உடலில் 7 முதன்மை சக்கரங்களும் 125 துணை சக்கரங்களும் இயங்குகின்றன. இதில் மண்ணீரலுக்கு தனி சக்கரம் இயங்குகிறது. இச்சக்கரத்தை தூண்டினாலும் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும்.

  பஞ்சபட்சி சாஸ்திரத்தில் பஞ்ச பட்சிகளில் ஒன்றான கோழி பட்சிக்கும், மண்ணீரலுக்கும் தொடர்புள்ளது. பஞ்சபட்சி சாஸ்திரப்படி ஒருவருக்கு இப்பட்சி பாதித்தால் அவருடைய மண்ணீரல் பாதிப்பு ஏற்படும்.

  வர்ம புள்ளியை தூண்டுவதாலும் பட்சி பரிகாரம் செய்து கொள்வதாலும் மண்ணீரலை சீராக இயங்க வைக்க முடியும். வெள்ளீரல் வர்மம் தூண்டும் போதும் மண்ணீரல் பலப்படும். நெஞ்சு வலி குறையும். இளைப்பு நோய் குறையும், சுவாசம் சீராகும், நுரையீரலில் உள்ள பிரச்சினைகள் குறையும்.

  மண்ணீரலில் தொடர்புடைய மற்றொரு வர்மபுள்ளியான பள்ள வர்ம புள்ளியை தூண்டுவதால் மண்ணீரல் சீராக இயங்கும். ஜீரணம் சீராகும், கருப்பை தொடர்பான சிக்கல் தீரும், அல்சர் குணமாகும், முதுகெலும்பில் உள்ள வலி குறையும், வயிற்று வலியும் குறையும். இந்த இரு வர்ம புள்ளியை தூண்டினால் இது போன்ற பிரச்சினைகள் தீரும்.

  அதே போல் மண்ணீரல் சக்கரம் தூண்டப்படும்போது மண்ணீரல் பலப்படும். பெண்களுக்கு மாதவிடாய் சீராக நடைபெறும். ஆண்மை பலப்படும். ஆண் & பெண் இன சேர்க்கை உணர்வை வெளிப்படுத்தும்.

  மனமும் உடலும் எப்போதும் உற்சாகமாக இருக்கும். நீண்ட நாள் கரு தங்காமை இருப்பவர்களுக்கு, கரு தங்கி தாய்மை அடையும் நிலை உருவாகும். அதே போல் பட்சி சாஸ்திர முறையில் மண்ணீரல் பட்சி எவருக்கு பாதிக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு அப்பட்சி நல்ல நிலையில் உள்ள வகையில் அந்த உறுப்பு சம்பந்தமான நரம்பை தூண்டுவதால் மண்ணீரலும் பலப்படும். மற்ற உறுப்புகளும் பலப்படும். அனைத்து நரம்புகளில் ரத்த ஓட்டமும் சீராகும். அப்பட்சிக்கான பரிகாரம் செய்யும்போது உடல் நலமும், வாழ்க்கை வளமும் ஏற்படும்.

  தூக்கமும் மூலையின் அதிர்வு அலைகளும்

  மண்ணீரல் மீது நமது முக்கிய கவனம் தேவை. ஏன் என்றால் மண்ணீரல் தான் நம் மூளையின் செயல்களையும், நரம்புகளின் மூலமாக தன் செயலை சீராக வைத்துக் கொள்கிறது. மனிதன் சீராக தொடர்ந்து 6 மணி நேரம் (அல்லது) 7, 8 மணி நேரம் தொடர்ந்து ஆழ்ந்து தூங்க வேண்டும். அவ்வாறு தூங்கினால் மண்ணீரலும் சீராக இயங்கும்.

  மூளையின் அதிர்வு அலை என்பது நாம் ஆழ்ந்த உறக்கத்தின் போது 3.5 அதிர்வு அலையாக இருக்கும். நாம் கனவு காணும் போது 5.5 முதல் 7.5 வரை அதிர்வு அலை இருக்கும். மனிதன் விழித்த பின்பு அல்லது பணியாற்றும் போது 21.1 அதிர்வு அலையாகும். மனிதனுக்கு கோபம் வரும்போது மூளையின் அதிர்வு அலை 21.5 முதல் 25 வரை ஏற்படும்.

  மனிதன் சாதாரண நிலையிலும் அதிர்வு அலை அதிகமானால் ரத்த அழுத்தமும் அதிகம் ஆகும். மூளையின் அதிர்வு அலையை நாம் அடிக்கடி அதிகம் ஆக்கினால் இருதயம் பாதிக்கப்படும்.
  Next Story
  ×