search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி
    X

    உடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி

    உடலும், மனமும் பாதிக்கப்பட்டால் அல்சர் வருவது உறுதி என்தை தெரிந்து கொள்ளுங்கள்.

    ஓட்டலில் சாப்பிட்டதால் அல்சர், வலி மாத்திரை சாப்பிட்டதால் அல்சர், காரமாய் சாப்பிட்டதால் அல்சர், சாப்பிடாமலேயே இருந்ததால் அல்சர், சாப்பாட்டை தள்ளி போட்டதால் அல்சர் என உணவு மட்டுமே அல்சருக்கு காரணம் என்று நினைத்துவிடாதீர்கள். நமது மனமும் அல்சர் உண்டாக ஒரு முக்கியமான காரணம்.

    உடலும், மனமும் சேர்ந்து குன்னுவதால் குன்மம் உண்டாகும் என்றும், கோபத்தாலும், சலிப்பாலும் குன்மம் வந்தடையும் என்று சித்தர்கள் குறிப் பிட்டுள்ளனர். உடலோடு சேர்ந்து, மனமும் பாதிப்படை வதாலும், கோபம் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பினாலும் அல்சர் என்ற குன்ம நோய் ஏற்படும் என்று சித்த மருத்துவம் தெளிவாக குறிப்பிடுகிறது.

    அல்சர் நோய் ஏற்பட்ட பின் கொஞ்சம், கொஞ்சமாக தீவிரமடையும் பொழுது நெஞ்சு மற்றும் மேல் வயிற்றில் எரிச்சல், விக்கல், வாந்தி, ஏப்பம், திடீரென மலச்சிக்கல் அல்லது கழிச்சல் உணவு செரியாமை, வயிறு உப்புதல், வயிறு வலித்து, உருண்டு, புரண்டு எழுதல் ஆகியன ஏற்படும். அல்சர் நோயிற்கு சிகிச்சை எடுக்காமல் உணவு கட்டுப்பாடு மேற் கொள்ளாமல் இருந்தால் வாந்தி, ரத்தத்துடன் வாந்தி ஆகியன ஏற்படலாம்.

    பிரண்டை, பசுந்தயிர், புதினா, ஏலக்காய், கருப்பு பேரீட்சை, சுரை, பூசணி, புடலை, பீர்க்கு, பரங்கி, முள்ளங்கி, சௌசௌ, சுண்டைக்காய், வெந்தயம், ஓமம், பாசிப்பருப்பு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும். மிளகுத்தக்காளி கீரை, தரைப்பசலை, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, இலச்சக்கட்டை ஆகியவற்றை உணவில் சேர்ப்பது நல்லது.

    நன்கு குழைய வடித்த சோறு, பிஞ்சு காய்கறிகள் அகியவற்றை சேர்ப்பது நல்லது. நோய் தீவிரமாக இருக்கும் பொழுது குருணை அரிசிக்கஞ்சி அல்லது பார்லிக் கஞ்சி சாப்பிடலாம். அசைவ உணவுகள், முட்டை மஞ்சள் கரு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

    குடல் பாதையில் நுண் கிருமிகள், குடற்புழுக்கள், பித்தப்பை கல், சீறுநரக கல், கல்லீரல் வீக்கம், ஈரல் பாதையில் தீவிர ரத்த அழுத்தம், ரத்தக் கொதிப்பு மற்றும் பல்வேறு மாத்திரைகளின் பாதிப் பினால் வயிற்றுப்புண்கள் உண்டாகலாம்.

    ஆகவே நோய் தீவிரமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற் கான பரிசோதனைகளை எடுத்து கொண்டு, அல்சரை குணப்படுத்தலாம். உணவு கட்டுப்பாடுடன் இருப்பது மட்டுமின்றி, மன அமைதியுடன் தினமும் 8 மணி நேர தூக்கம், சந்தோசமான வாழ்க்கை ஆகியவற்றால் அல்சரை நெருங்கவிடாமல் தடுக்க லாம்.

    டாக்டர் ஜெ.ஜெய வெங்கடேஷ், கோகிலா சித்த மருத்துவமனை, மதுரை. செல்:98421–67567.

    Next Story
    ×