search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கான முத்திரை
    X

    தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கான முத்திரை

    • நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.
    • இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்குறிய ஓய்வு வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு இரவு தூக்கம் மிக முக்கியமாகும்.

    இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர். நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது. எனவே நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.

    மேற்குறிப்பிட்ட பண்புகளை சரி செய்துவிட்டு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    சூரிய முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

    மாதங்கி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

    மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

    பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

    63699 40440

    pathanjaliyogam@gmail.com

    Next Story
    ×