search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    மூக்கு நன்கு இயங்க முத்திரை
    X
    மூக்கு நன்கு இயங்க முத்திரை

    மூக்கு நன்கு இயங்க முத்திரை

    நாம் நமது நாசித்துவாரத்தை நன்கு அடைப்பில்லாமல் பாதுகாக்க வேண்டும். அதற்குரிய எளிமையான யோகா நெறிமுறைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.
    நாம் தலைமுதல் கால் வரை ஒவ்வொரு உறுப்புகளையும் நன்கு இயங்கச் செய்யும் முத்திரைகள் உள்ளன. மூக்கிற்கு வலது நாசி, இடது நாசி என இரு நாசித்துவாரங்கள் உள்ளது.

    வலது நாசி சூரிய நாடி - உஷ்ணம், இடப்பக்க உறுப்புகளை கட்டுப்படுத்துகிறது. இடது நாசி சந்திரநாடி - குளிர்ச்சி, இது வலப்பக்க உறுப்புகளை கட்டுப்படுத்துகின்றது.

    இதற்கும், நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனித உடலில் நுரையீரலின் இயக்கம் நன்றாக இருப்பதற்கு, வாயிலாக, இருவாயிலாக மூக்கின் நாசி துவாரங்கள் அமைந்துள்ளன. இரு நாசியிலும் அடைப்புகள் இருக்க கூடாது. நாசி துவாரம் அடைப்பு இருந்தால் நுரையீரல் நன்கு இயங்காது. எனவே நாம் நமது நாசித்துவாரத்தை நன்கு அடைப்பில்லாமல் பாதுகாக்க வேண்டும். அதற்குரிய எளிமையான யோகா நெறிமுறைகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

    லிங்க முத்திரை: விரிப்பில் நிமிர்ந்து அமரவும் . கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் எல்லா கைவிரல்களையும் இணைத்து இடது கை கட்டை விரலை மேல்நோக்கி வைக்கவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

    நாடிசுத்தி அடிப்படை பயிற்சி: விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் பத்து வினாடிகள்.
     
    இடது கை சின் முத்திரையில் இருக்கவும். பெருவிரல் ஆள்காட்டி விரல் நுனியை இணைக்கவும்.வலது கை கட்டை விரலால் வலது நாசியை அடைத்து இடது நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.பின் வலது கை மோதிரவிரலால் இடது நாசியை அடைத்து வலது நாசி வழியாக மூச்சை இழுத்து வலது நாசியிலேயே மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440
    Next Story
    ×