search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    கண்கள் நன்கு இயங்க முத்திரை
    X
    கண்கள் நன்கு இயங்க முத்திரை

    கண்கள் நன்கு இயங்க முத்திரை

    தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் பார்ப்பது, இரவு தூங்காமல் கண் விழிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களால் கண் நரம்புகளுக்கு துன்பம் கொடுக்கிறோம்.
    மனித உறுப்புக்கள் எல்லாமே மிக முக்கியமானவை தான். அதிலும் நாம் அனைவரிடமும் சொல்வது இவர் என் வாழ்வில் கண் போன்றவர் என்று கூறுவோம். காரணம் காலை முழித்ததிலிருந்து இரவு படுக்கும் வரை நம் கண்கள் உதவியுடனேயே அனைத்து காரியங்களும் நடக்கின்றது.

    ஆனால் அதற்கு அனைவரும் நன்றி செலுத்துகிறோமா என்றால், இல்லையென்று தான் சொல்ல வேண்டும். நன்றி செலுத்தவில்லை என்றாலும் தொந்தரவு கொடுக்காமல் இருந்தாலே போதும். தொடர்ந்து பல மணி நேரம் செல்போன் பார்ப்பது, இரவு தூங்காமல் கண் விழிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களால் கண் நரம்புகளுக்கு துன்பம் கொடுக்கிறோம். பின் கண் பார்வை மங்கும் பொழுது தான் கண்களின் மகிமை பற்றி முக்கியத்துவம் பற்றி எண்ணுகிறோம்.

    அந்த காலத்தில் 120 வயது வரை கண்பார்வை அழகாக வைத்து வாழ்ந்தார்கள். கண்ணாடி போடாமல், கேட்ராட் அறுவை சிகிச்சை செய்யாமல் வாழ்ந்தார்கள். இன்று பத்து வயதில் கண்பார்வை மங்கி கண்ணாடி அணிகின்றனர். ஏன்? நமது உடலில் உள்ள உயிர்சக்தி (விந்து, சுக்கிலம் - ஆண்கள் /சுரோணிதம் - பெண்கள்) யை சரியாக நாம் உபயோகிக்க தவறியது தான் காரணம்.

    இரண்டாவது, சரியான தூக்கம் இல்லாதது. நிறைய நபர்கள் இரவு முழுவதும் வேலை பார்க்கின்றனர். இது நமது இராஜ உறுப்புகளை பாதிக்கும். குறிப்பாக லிவர் இயக்கம் சரியாக இருக்காது. அதனால் கண்கள் பாதிப்பு ஏற்படும். நமது உடல் ஆரோக்கியம் தான் நமக்கு முக்கியம் என்று உணர்ந்து இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை ஆழ்ந்த நித்திரை ஒரு மனிதனுக்கு வேண்டும். அப்பொழுது தான் கண்கள் நன்கு இயங்கும்.

    கண்கள் நன்றாக இயங்க சரியான தூக்கம், சாத்வீகமான உணவு, உயிர்சக்தி காத்தல், இதனை சரியாக கடைபிடித்து அத்துடன் இந்த முத்திரையும், கண் பயிற்சியையும் தினமும் பயின்றால் நிச்சயமாக கண்கள் நன்கு இயங்கும்.

    கண் பயிற்சி: நிமிர்ந்து அமரவும். இரு கட்டை விரல் சேர்ந்திருக்குமாறு கை விரல்களையும் கோர்த்து படத்தில் உள்ளது போல் கீழிருந்து மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தவும். கண் விழிகள் கட்டை விரலை நோக்கி மேலே கொண்டு செல்லவும். தலைக்கு மேல் கைகளை உயர்த்தும் பொழுது, கண்களை மேல் நோக்கி பார்க்கவும். பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக தலைக்கு மேலிருந்து கீழ்நோக்கி கைவிரல்களை கொண்டு வரவும். இதுபோல் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.

    யோகக் கலைமாமணி
    பி,கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440

    Next Story
    ×