search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    யோக முத்திரை
    X
    யோக முத்திரை

    சிறுநீர் பிரச்சினையை தீர்க்கும் யோக முத்திரை

    சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்கு இயங்க செய்யும் எளிய யோக பயிற்சிகள் உள்ளன. இதன் மூலம் உடலை, உடல் உள் உறுப்பை சிறப்பாக இயங்கச் செய்யலாம்.
    ஜலோதர நாசிக் முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் சுண்டு விரலை மடித்து அதன் நகக்கண்ணில் கட்டை விரலை வைக்கவும். படத்தை பார்க்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் கண்களை திறந்து கைகளை சாதாரணமாக வைக்கவும். காலை, மாலை இரு வேளை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

    பிராண முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும். பின் மோதிரவிரல்&சுண்டுவிரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலால் தொடவும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். இரவு படுக்கும் முன் இரண்டு நிமிடம் இந்த முத்திரையை பயிலவும். இந்த முத்திரையை மட்டும் இரவு படுக்கும் முன் செய்துவிட்டு படுக்கவும். இரவு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை விரைவிலேயே மாறும்.

    சக்தி முத்திரை

    விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக் கட்டும். விரிப்பில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இருபது வினாடிகள் இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக் கவும். பின் கட்டை விரலை மடக்கி உள்ளங்கைக்குள் வைத்து அதன் மேல் ஆள்காட்டி விரலையும் நடு விரலையும் வைக்கவும். மோதிரவிரலும் சுண்டு விரல் நுனியும் படத்தில் உள்ளது போல் நுனிகளை தொடவும். சாதாரண மூச்சில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரணமாக கைகளை வைக்கவும்.

    நாற்காலியில் நவாசனம்

    ஒரு நாற்காலியில் அமரவும், நாற்காலியில், சற்று முன் அமர்ந்து இரு கால்களையும் மெதுவாக படத்தில் உள்ளது போல் நீட்டவும். இரு கைகளினால் கால் முட்டு பக்கத்தில் பிடித்துக்கொள்ளவும். பத்து வினாடிகள் முதல் இருபது வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக காலை தரைக்கு கொண்டு வரவும். இதே போல் மூன்று தடவைகள் பயிற்சி செய்யவும். காலை, மாலை சாப்பிடுமுன் இரண்டு முறைகள் பயிலவும்.

    மூலாதார தியானம்

    நிமிர்ந்து உட்காரவும், முது கெலும்பு நேராக இருக் கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை ஒரு இரு பது வினா டிகள் தியானிக் கவும். பின் மிக மெதுவாக இரு நாசிவழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை முதுகுத்தண்டின் கடைசி கீழ் பகுதி உள் பகுதியில் நிலைநிறுத்தவும். இயல்பாக நடக்கும் மூச்சை அந்த இடத்தில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடம் உங்களது உணர்வை முதுகு தண்டு கடைசி உள் பகுதியில் நிலை நிறுத்தவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.
    இந்த மூலாதார சக்கரா தியானம் கோனாடு சுரப்பியை கட்டுப்படுத்துகின்றது. கோனாடு சுரப்பி சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகின்றது. இந்த இடத்தில் தியானம் செய்யும் பொழுது மூச்சை நினைக்கும் பொழுது நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைக்கும். அதனால் சிறுநீரகம் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரி செய்யப்படுகின்றது.

    காலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றோம். நிறைய நபர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். யாரையாவது பார்ப்பதற்கு சென்றால், காத்திருக்க சொன்னால், அமர்ந்திருக்கும் பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் கண்களை திறந்தவாரே உங்களது மூச்சை, உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து தியானிக்கவும்.

    இரவு படுப்பதற்கு முன்பாக விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி பிராண முத்திரையில் உங்களது உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். காலை எழுந்தவுடன் இதே போல் ஐந்து நிமிடம் தியானிக்கவும். அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு சென்றால் அந்த நேரத்தை நாற்காலியில் அமர்ந்து முதுகு தண்டின் கடைசி உள் பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். இப்படி கிடைக்கின்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நாளில் பத்து முறை இந்த மூலாதார சக்கரா தியானத்தை நம்மால் செய்ய முடியும். நிச்சயம் சிறுநீரகம், சிறு நீரகப்பை நன்கு இயங்கும்.

    யோகக் கலைமாமணி
    பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
    6369940440

    Next Story
    ×