என் மலர்

  ஆரோக்கியம்

  பிரிதிவி முத்திரை
  X
  பிரிதிவி முத்திரை

  சைனஸ் பிரச்சனையை தீர்க்கும் பிரிதிவி முத்திரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது.
  கவலைப்படாதீர்கள், இதோ பலவித பலன்கள் தரும் பிரிதிவி முத்திரை பயிற்சி செய்யுங்கள், வளமாக வாழுங்கள். பஞ்ச பூதங்களில் நிலம் என்ற பூதம் உடலில் சமஅளவில் இருந்தால் வியாதி இருக்காது. மனமும் அமைதியாக இருக்கும். இந்த நிலம் என்ற பூதம் உடலில் அளவிற்கு அதிகமாக இருந்தால் பேராசை ஏற்படும்; மன சஞ்சலம் ஏற்படும்.

  பிரிதிவி முத்திரை மூலம் நமது உடலில் உள்ள நிலம் என்ற பூதம் அதனுடைய சரியான விகிதத்தில் உடலில் செயல்படும். அதனால் நமது உடலில் பலவகையான வியாதிகள் வருவதைத் தடுக்கின்றது. உள்ளமும் அமைதியாக இருக்கின்றது.

  பிரிதிவி முத்திரை செய்யும் முறை


  விரிப்பில் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி நிமிர்ந்து உட்காருங்கள். வஜ்ராசனம் அல்லது பத்மானசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும்.

  பின் பெருவிரல், மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டு அழுத்தம் கொடுக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இவ்வாறு செய்யவும். முதலில் மூன்று நிமிடங்கள் செய்யவும். பின் 5 முதல் 10 நிமிடங்கள் வரை இந்நிலையில் இருக்கலாம். காலை, மதியம், மாலை, மூன்று நேரம் சாப்பிடும் முன் செய்யலாம் மூன்று வேளை செய்ய முடியாதவர்கள் இருவேளை (காலை, மாலை) செய்யலாம்.

  இதன் அற்புத பலன்கள் இதோ

  தோல் முழுவதும் நன்கு பளபளப்பாகத் திகழும். மன, உடல் சோர்வை நீக்கும். மிகவும் மெலிந்து பலவீனமாய் உள்ளவர்கள் இந்த முத்திரையை தொடர்ந்து செய்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக இரத்தத்தில் சேரும். உடல் எடை படிப்படியாக கூடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  மேலும் இந்த முத்திரை உடலில் ஏற்படும் வாயுத்தொல்லையை சரிசெய்து சுறுசுறுப்புடன் இயங்க வழி வகுக்கின்றது.

  சைனஸ் நோய் நீங்க

  நிறைய மனிதர்கள் சைனஸ் என்ற வியாதியினால் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு இந்த முத்திரை ஒரு வரப்பிரசாதமாகும். தொடர்ந்து செய்தால் மூக்கடைப்பு, மூச்சுதிணறல் போன்ற உபாதைகள் நீங்கும்.

  மூட்டுவாதம்

  மூட்டில் வலி, வாயு சம்மந்தமான கோளாறு நீங்கி வளமாக வாழலாம். சிலருக்கு நடக்கும் பொழுது உடல் தள்ளாட்டம் இருக்கும். இந்த பிரிதிவி முத்திரை மூலம் உடல் தள்ளாடுவது நீங்கும். கழுத்து முதுகெலும்பு நன்கு திடமாக ஆரோக்கியமாக இருக்கும். முகம் நல்ல பொலிவுடன் இருக்கும். உடல் வெப்பம் அதிகமானாலும், குறைந்தாலும் பல பிரச்சினைகள் வரும். இந்த முத்திரை செய்தால் உடலில் வெப்பம் சமநிலையில் இருக்கும். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும்.

  மனத்தெளிவு இந்த முத்திரையில் கிடைக்கின்றது. அலைபாயும் மனம் அடங்க வழி தெரியவில்லையே என்று ஏங்கும் அன்பர்கள், இந்த முத்திரையை நம்பிக்கையுடன் செய்யுங்கள். நிச்சயம் மனம் ஒடுங்கும். பேரமைதி கிட்டும்.

  பொறுமை, தன்னம்பிக்கை

  வாழ்க்கையில் பெரிய சாதனைகள் சாதித்தவர்கள் எல்லோரும் பொறுமையும், தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு பண்புகளும் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வாழ்வில் சாதிக்க முடியும். இந்த இரண்டு பண்புகளும் இந்த முத்திரையைச் செய்தால் நிச்சயம் கிடைக்கும். எனவே படிக்கும் மாணவர்கள் இளம் வயதிலேயே இதனைச் செய்தால் பொறுமை, தன்னம்பிக்கை என்ற இரு நாடிகளும் சிறப்பாக இயங்கி வாழ்வில் பெரிய சாதனையைச் செய்து வெற்றியுடன் வாழலாம்.

  Next Story
  ×