search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் வலிமையை அதிகரிக்கும் பூட் கேம்ப் பயிற்சிகள்
    X

    உடல் வலிமையை அதிகரிக்கும் பூட் கேம்ப் பயிற்சிகள்

    ஏராளமான கலோரிகளை வேகமாக இழந்து, அதேநேரத்தில் வலிமையையும் ஸ்டாமினாவையும் அதிகரிக்க நினைப்பவர்கள் பூட் கேம்ப் பயிற்சிகளை செய்யலாம்.
    ராணுவத்தில் புதிதாக சேர்பவர்களுக்கு வழங்கப்படும் பூட் கேம்ப் பயிற்சிகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. முழு உடலையும் பயிற்சிக்கு உட்படுத்தும். உடல் இயக்கம், வலிமைக்கான பயிற்சிகள், இடைவெளி பயிற்சிகள் போன்று சிறுசிறு பிரிவுகளாக செய்யப்படும் பல பயிற்சிகளின் தொகுப்பு இது. இந்த பயிற்சிகள் தீவிரமானவை, ஓய்வு இல்லாமல் ஒரு பயிற்சியிலிருந்து இன்னொரு பயிற்சிக்கு செல்ல வேண்டியிருக்கும். உடலின் அதிகபட்ச தாங்குதிறன் சோதிக்கப்படும்.

    சிறப்பம்சம்: திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகளுக்கு முன்பு உடலை அழகுப்படுத்திக் கொள்ள பூட் கேம்ப் மிக விரைவான பயிற்சி முறையாகும். இதில் குறைந்த நேரத்தில் அதிகபட்ச கலோரிகளை செலவழிக்க முடியும். பல பேர் சேர்ந்து செய்வதால், ஊக்கம் தரக்கூடியதாகவும் இருக்கும்.

    இந்த பயிற்சியை டம்ப்-பெல்ஸ், உடற்பயிற்சி பால், தரை மேட் மற்றும் பூட் கேம்ப் டி.வி.டி. எந்த கருவிகளும் இல்லாமலும் முயற்சிக்கலாம். ஒரு குழு வகுப்பில் சேர்வது அதிக பலனைத் தரும். திறந்தவெளியில், வீட்டு மாடியில் தனியாகவும் முயற்சிக்கலாம்.

    இந்த பயிற்சிக்கு இதற்கு குறைந்தபட்ச உடல்தகுதி மிகவும் அவசியம். அதிகபட்ச உடற்பயிற்சியை உங்கள் உடல் தாங்குமா என்று டாக்டரிடம் கேட்டுக்கொள்ளவும். ஒரு டிரெய்னரின் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது. வீட்டில் செய்யும்போது டி.வி.டி. வழிமுறைகளை கவனமாக பின்பற்றுங்கள்.

    தினசரி குறைந்தபட்ச உடற்பயிற்சியைகூட செய்யாமல் இருக்கும் நபர்களுக்கு, பூட்கேம்பை பயிற்சியை செய்யக்கூடாது. அனுபவம்மிக்க பயிற்சியாளரின் கீழ் செய்வதுதான் நல்ல பலனைத் தரும்.

    ஒரு மணி நேர பயிற்சியில் 600 முதல் 750 கலோரிகள் இழக்கும்.
    Next Story
    ×