என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்
    X

    மனதை ஒருநிலைப்படுத்தும் விருச்சாசனம்

    மனஅமைதி மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தவும் இந்த ஆசனத்தை தினமும் செய்து வரலாம். இப்போது இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    செய்முறை :

    முதலில் விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். அடுத்து இடது காலை தூக்கி வலது பக்கத் தொடையின் உட்புறத்தில் கால் விரல்கள் கீழ்நோக்கி இருக்குமாறு வைக்கவும்.

    இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பிய நிலையில் வைக்கவும். இந்நிலையில் சுவாசத்தை இழுத்து வெளி விடவும். 30 விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு மெதுவாக வரவும்.

    இவ்வாறு கால்களை மாற்றி அடுத்த காலில் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும்.

    பலன்கள் :

    கால்கள் வலுவடைகின்றன.

    வாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்கள் குணமாகின்றன.

    மனதை ஒரு நிலைப்படுத்தும்.
    Next Story
    ×