search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தலை, மூக்கு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் குபேர முத்திரை
    X

    தலை, மூக்கு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் குபேர முத்திரை

    தலை, மூக்கு சம்பந்தமான நோய்களை குணமாக்கும் குபோர முத்திரையை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    குபேர முத்திரை, நம் ஆழ்மனதைத் திறக்கும் சாவியைப்போல செயல்படுகிறது. உடல்நலம், மனநலம், வளமான வாழ்க்கை, உயர்ந்த லட்சியங்கள், தன்னம்பிக்கை ஆகியவற்றை அடையத் துணைபுரிகிறது.

    செய்முறை :

    கட்டைவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். மோதிர விரல் மற்றும் சுண்டுவிரலை மடக்கி உள்ளங்கை நடுப்பகுதியில் தொட வேண்டும். உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு கைகளிலும் இந்த முத்திரை பிடிக்க வேண்டும்.

    தரையில் விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ, நாற்காலியில் உட்கார்ந்து கால்களை தரையில் ஊன்றியோ செய்யலாம். ஒரு நாளைக்கு இருவேளை 10 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம். படுத்துக்கொண்டு செய்யக் கூடாது.

    பலன்கள்  :

    நீர் கோத்தலால் ஏற்படும் தலைவலி, கண்களுக்கு கீழுள்ள எலும்புகளைத் தொட்டாலோ அழுத்தினாலோ ஏற்படும் வலி, தலைபாரம், சைனஸ் ஆகியவை குணமாக ஒரு மாதத்துக்கு இரு முறை என 20 நிமிடங்கள் செய்யலாம்.

    மூக்கில் அடைப்பு, குளிரால் மூச்சுவிட முடியாதது, மூச்சுத் திணறல், சளி, சுவாசப்பாதையில் உள்ள பிரச்னைகள் சரியாகும்.

    உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சொப்பனஸ்கலிதம் என்ற விந்து வெளியேறுவது கட்டுக்குள் வரும்.

    குழந்தைகள் ஒரு மாதத்துக்கு 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்ய, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சீராகி, நினைவுத்திறன் அதிகரிக்கும். வளர் இளம் பருவத்தினர் செய்ய, நல்ல எண்ணங்கள் உருவாகும்.
    Next Story
    ×