என் மலர்
பெண்கள் உலகம்

வாயுத்தொல்லையை போக்கும் பவன முக்தாசனம்
இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
செய்முறை :
விரிப்பில் அமர்ந்து முதலில் மல்லாந்து படுத்துக்கொள்ளவும். பக்கவாட்டில் கைகள் நீட்டியிருக்க உள்ளங்கைகள் கீழ் நோக்கி, புறங்கைகள் மேலே இருக்குமாறு வைத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மூச்சை நன்றாக இழுத்து மெதுவாக விடவும். மூச்சுக்காற்றை வெளியே விடும்போது இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து உயர்த்தி மடித்து வயிற்றின் மீது கொண்டுவரவும். கைவிரல்களை ஒன்று சேர்த்து அல்லது தனித்தனியாக கால் முட்டிகளை பிடித்து வயிற்றில் அழுத்தம் கொடுக்கவும்.
தலையை உயர்த்தி முகவாய் கட்டையை இரண்டு முட்டிகளுக்கு இடையில் கொண்டு வந்து வைக்கவேண்டும். இதனை ஒவ்வொரு கால்களாகவும் செய்யலாம்.
சாதாரண மூச்சில் 15 வினாடிகள் இருந்து விட்டு கால்களையும் தலையையும் பிரித்து மல்லாந்து படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். ஐந்து முறை செய்து விட்டு இயல்பு நிலைக்கு வரவேண்டும்.
மூச்சின் கவனம் : வயிறு அழுத்தும் போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பாக மூச்சு, விடுபடும் போது உள்மூச்சில் கவனம் செலுத்த வேண்டும்.
பலன்கள் : வாயுத்தொல்லை நீங்கி ஜீரண சக்தி அதிகரிக்கும். அபான வாயுத்தொல்லை பெருமளவு நீங்கும். அதிக உடல் எடை தொப்பை குறையும். வயிற்றுப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். சர்க்கரை நோய் கட்டுப்படும். மலச்சிக்கல் நீங்கும்.
எச்சரிக்கை : கழுத்துவலி உள்ளவர்கள் முதுகெலும்புப் பிரச்சனைகள் உள்ளவர்கள் செய்யக்கூடாது.

Next Story