என் மலர்

  ஆரோக்கியம்

  நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு உகந்த அபான முத்திரை
  X

  நீரிழிவு, இதய நோயாளிகளுக்கு உகந்த அபான முத்திரை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
  செய்முறை :

  படத்தில் உள்ளபடி மோதிர விரலையும், நடு விரலையும் கட்டை விரலோடு லேசாகத் தொடவேண்டும். மற்ற இருவிரல்களும் மேலே நீட்டியபடி இருக்க வேண்டும்.

  நேர அளவு :

  எவ்வளவு நேரமும் செய்யலாம். இதய மற்றும் உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு நாளும் இருதடவைகள் 15 நிமிடங்களுக்குச் செய்து வருதல் மிக்க சிறப்பைத் தரும். இதை உட்கார்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ செய்யலாம்.

  பலன்கள் :

  சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுக்கள் நன்கு வேலை செய்வதோடு, சுகப்பிரசவம் தரும், கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை நீக்கவல்லது.

  பைல்ஸ், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதை தொடர்ந்து செய்வதால் அவற்றின் தாக்கத்திலிருந்து நிச்சயம் விடுபடலாம்.

  இதயத்திற்கு அனுகூலத்தைத் தரும். மாரடைப்பு வருவதை தடுக்கும். மேலும் வாயுவை உடலில் நீக்க உதவும். இதயத்தை வலுப்படுத்தி இதயதுடிப்பைச் சீராக்கும்.

  கழிவுத் தொகுதியை ஒழுங்குபடுத்தும்.

  குறிப்பு :

  இதை கர்ப்பிணிகள், முதல் 8 மாதம் வரை செய்யக்கூடாது.
  Next Story
  ×