என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    நினைவாற்றலை அதிகரிக்கும் நாக முத்திரை
    X

    நினைவாற்றலை அதிகரிக்கும் நாக முத்திரை

    எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும் முத்திரை இது.
    செய்முறை :

    வலது கையின் மேல் இடது கையைக் குறுக்காக வைத்துக் கட்டை விரலை ஒன்றின் மீது ஒன்றாக வைக்கவும். மார்பு பகுதிக்கு நேராக வரும்படி வைத்துக்கொள்ளவும்.

    தரையில் அமர்ந்து கொண்டோ அல்லது சேரில் அமர்ந்து கொண்டோ இநத் முத்திரையை செய்யலாம். நேரம் கிடைக்கும் போது எல்லாம் இந்த முத்திரையை செய்யலாம்.

    பயன்கள் :

    நல்ல நினைவாற்றல் கிடைக்கும். கோபம், வெறுப்பு, நாட்டமின்மை, ஹிஸ்டீரியா போல் செயல்படுவது, எதற்கெடுத்தாலும் பயம் கொள்வது போன்ற எதிர்மறை குணங்கள் நீங்கும்.

    மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் ஏற்படும். கற்பனைத் திறன் வளரும். தினமும் 10 முதல் 15 நிமிடம் பழகினால் போதும். மாற்றங்களை உடனடியாகக் காணலாம்.

    Next Story
    ×