search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கட்டுப்பாட்டை மீறிய பதின் பருவத்தினரை மீட்டெடுக்கும் வழிகள்
    X

    கட்டுப்பாட்டை மீறிய பதின் பருவத்தினரை மீட்டெடுக்கும் வழிகள்

    • சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.
    • தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள்.

    குழந்தைகள் பதின் பருவத்தை அடையும்போது தனிப்பட்ட அடையாளம் மற்றும் சுதந்திரத்தை அடைய விரும்புகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் இதில் தலையிடும்போதே அவர்களின் நடத்தைகளில் மாற்றம் ஏற்படுகிறது. அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது என்று குழந்தைகள் நம்ப வேண்டும்.

    அதன் பின்னர் அவர்களை கண்காணித்து தவறு இருந்தால் உடனடியாக சுட்டிக்காட்டவேண்டும். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உதவ வேண்டும்.

    பதின் பருவத்தினர் கோபப்பட்டாலும் கத்தினாலும் பெற்றோர்களாகிய நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பொறுமையாகப் பேசி புரிய வைக்க வேண்டும்.

    பதின் வயதினருக்கு மட்டுமின்றி அனைத்து வயதினருக்கும் அனைத்து சூழ்நிலைகளிலும் தேவையானது அன்பும் ஆதரவும். அந்தவகையில் உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை இனிமேல் நீங்கள் மரியாதையுடனும் நடத்த வேண்டும். அவர்களுக்காக நேரம் செலவழித்து பேசுவது பிரச்சினைகளை வெளிப்படையாக தெரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. பதின் பருவத்தினர் நேர்மையாக இருக்க இது உதவும்.

    வீட்டின் முக்கிய முடிவுகளில் அவர்களை முன்னிலைப்படுத்தலாம். பதின் பருவத்தினர் தங்களின் உணர்வுகளை வெளிப்படையாக தெரிவிப்பதற்கு பெற்றோர்கள் அவர்களை அனுமதிக்க வேண்டும். உங்கள் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரை பிசியாக வைத்துக் கொள்வதன் மூலம் தேவையற்ற பழக்க வழக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்க முடியும். நேரடியாக பல விளையாட்டுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம்.

    அதாவது படிப்பு மட்டுமின்றி, வேறு கலைகளிலும் அவர்களை ஈடுபடுத்துவதால் அவர்களின் திறமையை கண்டறிய முடியும். படிப்பு, கலைகளில் நேரம் செலவழிப்பதில் எதிர்மறை எண்ணங்கள் தோன்ற நேரம் கூட இருக்காது. பிரச்சினைகளை கண்டறிந்து தீர்க்க முடியாத பட்சத்தில், இறுதியாக மன நல ஆலோசகரை அணுகலாம். சாதாரணமாக பதின் பருவத்தினரை ஏதாவது பொது இடத்திற்கு வெளியில் அழைத்து சென்று மனநல மருத்துவரிடம் பேச வைக்கலாம். பதின் வயதில் ஏற்படும் சில உணர்ச்சிகள், பெற்றோரிடம் சொல்ல முடியாதவையாக கூட இருக்கலாம்.

    பதின் பருவத்தில் வரும் மாற்றங்கள் சாதாரணமானவை என்றாலும் அந்த நேரத்தில் பதின்பருவத்தினரை எவ்வாறு வழிநடத்துகின்றோமோ அதன்படி அவர்களின் எதிர்கால குணங்கள், நடத்தைகள் உருவாகின்றன.

    Next Story
    ×