search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இளம்வயது குழந்தைகளை கையாள்வது எப்படி?
    X

    இளம்வயது குழந்தைகளை கையாள்வது எப்படி?

    • உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம்.
    • பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம்.

    உடல் அளவிலும் மனதளவிலும் பல மாற்றங்களை உணரக் கூடிய பருவம் பதின் பருவம். பொதுவாக டீன்ஏஜ் எனும் பதின் பருவமான 13 வயது 19 வயது வரை குழந்தைகள் வளர்ப்பில் சிக்கலான பருவமாகவே பார்க்கப்படுகிறது. குழந்தை பருவத்திற்கும் வளர் பருவத்திற்கும் இடையிலான காலகட்டத்தில் உடலுறுப்புகளின் வளர்ச்சி, பலவித ஹார்மோன்களின் சுரப்பு என ஏற்படும் உடல் மாற்றங்கள், நடத்தையிலும் உணர்ச்சிகர பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

    இந்த பதின் வயதில் குழந்தைகளை பெற்றோர்கள் சரியாக கையாள வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் காலம்காலமாக தொடர்கின்றன. பதின் வயதில் பெரும்பாலான குழந்தைகளிடம் கட்டுப்பாட்டை மீறிய எதிர்மறை நடத்தைகள் அதிகம் இருக்கும். இதற்கு உடலியல் மாற்றங்களே முக்கிய காரணம்.

    மேலும், பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டு அவர்கள் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் நேரம். தனித்துவத்தை தேடும் நோக்கில் மற்றவர்களிடம் மரியாதையின்றி கோபப்பட்டு நடந்து கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். குறுகிய மனப்பான்மை, பெற்றோருடன் விவாதம் செய்வது. குடும்பத்தினருடன் பேசுவதைத் தவிர்ப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்க மறுப்பது, விதிமுறைகளை மீறுதல் என அவர்களின் செயல்பாடுகள் இருக்கும். உடலியல் மாற்றங்களால் நிகழும் நடத்தை மாற்றங்கள் இவை என்பதால் இது சாதாரணமானதுதான். இதிலும் ஒரு படி அதிகமாக நாம் முதலில் குறிப்பிட்ட எதிர்மறை பழக்கங்களை மேற்கொள்வது மிகவும் கவலைக்குரிய அறிகுறியாகவே பார்க்கப்படுகின்றது.

    இதில் வீட்டில் உள்ள பதின் பருவத்தினரிடம் பெற்றோர் மனம்விட்டு பேசினாலே இந்த பிரச்னைகள் சரியாகி விடும். இரண்டாவது கட்டத்தில் உள்ள பதின் பருவத்தினரின் நடத்தைகளில் பெற்றோர்களாகிய நீங்கள் எவ்வளவு துரிதமாக சாமர்த்தியமாக செயல்படுகிறீர்களோ அவ்வளவு நல்லது. ஏனெனில் ஆரோக்கியமற்ற நடத்தைகளால் பதின் பருவத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

    பதின் பருவத்தினருக்கு புரிந்துகொள்ளும் திறன் மிகவும் குறைவாக இருக்கும். அனைத்தையும் ஒருவித பதற்றத்துடன் அணுகுவது, சிறிய பிரச்சினைகளை பெரிதாக்குவது, கூச்சல் போடுவது, முற்றிலும் பொறுமையின்றி இருப்பது என்று எல்லாம் இருக்கும். இதன் காரணமாக ஏற்படும் மன உளைச்சலினால் புகை, மது என தவறான பாதைகளில் செல்கின்றனர். இளைஞர்களை விட பதின் வயதினர்தான் போதைப்பொருள் பழக்கத்திற்கு இன்று அதிகம் அடிமையாகின்றனர்.

    போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் அவர்களுக்கு அப்போது இருப்பதில்லை. பதின் வயது மாற்றங்கள் ஆண், பெண் என இரு பாலருக்கும் இருக்கும். மகன் அல்லது மகளின் உடல், மனதில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் அவர்களின் பிரச்சினைகளை அறிந்து தீரக்க முடியும்.

    Next Story
    ×