search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை
    X
    குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனை

    குழந்தைகளைப் பாதிக்கும் செவித்திறன் பிரச்சனையும்... சிகிச்சை முறையும்...

    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர்.
    குழந்தைகளுக்கு மூன்று முதல் ஐந்து வயதுவரையிலான காலம் மிக முக்கியமானது. இந்தக் காலத்தில்தான், மூளை அதிவேகமாக வளர்கிறது. நியூரான்களுக்கு இடையிலான இணைப்பும் அந்தக் காலகட்டத்தில்தான் ஏற்படுகிறது. அப்போதுதான் மூளையானது தன் முழு வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது‌. இத்தகைய வளர்ச்சியின்போது குழந்தைகளின் மொழித் திறன்,பேசும் திறனை செவித்திறன் வாயிலாக அவர்கள் வாழும் சூழலுக்கேற்ப கற்றுக்கொள்கின்றனர். 

    ஓடிடிஸ் மீடியா (Ottitis media):

    குழந்தைகளுக்குப் பொதுவாக ஏற்படும் தொற்று ஓடிடிஸ் மீடியா. இது பெரும்பாலும் யூஸ்டாசியன் டியூப்  (Eustachian tube malfunction) செயல் இழப்பதால் ஏற்படுகிறது. நடுக்காதையும் உள்மூக்கின் மேல்பகுதியையும் இணைக்கும் குழல்தான் யூஸ்டாசியன் டியூப். பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளில் இந்த யூஸ்டாசியன் டியூப் அமைந்திருக்கும் நிலை காரணமாகக் குழந்தைகளில்  ஓடிடிஸ் மீடியா  அதிகம் ஏற்படுகிறது எனலாம்.

    குழந்தைகளுக்கு இந்தக் குழாய் செங்குத்தாக இருப்பதால் தொற்று எளிதாகப் பரவி நடுக்காது பகுதிக்குப் பரவக்கூடும். இதனால் தண்ணீரோ அல்லது திரவமோ நடுக்காதில் சேர வாய்ப்பு உள்ளது. இது பாக்டீரியாவின் வளர்ச்சியை அதிகரிக்கும். குழந்தை வளர்ச்சியின் காரணமாக கிடைமட்ட நிலைக்கு மாறுவதால், தொற்று ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

    * கண்டக்டிவ் ஹியரிங் லாஸ் (Conductive hearing loss): ஒலியானது வெளியே இருந்து உள் காதுக்குச் செல்லும் பாதையில் ஏற்படும் தடையை `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்' என்பார்கள். எடுத்துக்காட்டாக அந்நியப் பொருள்கள் பாதையை அடைப்பது (Foreign wax) மற்றும் அழுக்கு சேர்வது (Ear wax).

    * சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ் (Sensori -neural hearingloss): காக்ளியா அல்லது உள்காதிலிருந்து மூளைக்கு எடுத்துச் செல்லும் நரம்பில் ஏற்படும் பாதிப்பே, ,`சென்சரி நியூரல் ஹியரிங் லாஸ்' ஆகும். காக்ளியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாக வரும் செவித்திறன் குறைபாடு, இந்த வகையைச் சார்ந்ததாகும்.

    சிகிச்சை முறை

    * காதில் தொற்று ஏற்பட்டால், செவித்திறன் பரிசோதனை வல்லுநர் மூலம் மட்டுமே செவித்திறன் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். பின்னர் செவித்திறன் குறைபாட்டின் தன்மைக்கேற்ப காதொலிக் கருவிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பயனாளர்களுக்கு இலவசமாகவே காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    *காக்ளியர் இம்ப்ளான்ட்

    காக்லியாவின் வளர்ச்சியில் ஏற்படும் பிறழ்வு காரணமாகப் பிறவிக்கேள்விக் குறைபாடு ஏற்படக்கூடும் .குழந்தைகள் பேச்சுத்திறனிலும் மொழித் திறனிலும் பின்தங்கிக் காணப்படுவார்கள். இந்நிலையில் காக்ளியர் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை (உள்காது நரம்பியல்) மூலம் கேட்கும் திறனை முழுமையாகப் பெற முடியும். 
    Next Story
    ×