என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளர வேண்டுமா?
    X

    குழந்தைகள் பொறுப்பானவர்களாக வளர வேண்டுமா?

    குழந்தைகளை பொறுப்பானவர்களாக வளர பெற்றோர் என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
    குழந்தைகளும் நம்மை போன்று பொறுப்பானவர்களாக வளர வேண்டும் என்றால் வீட்டில் உள்ள சின்னச் சின்ன வேலைகளை அவர்களிடம் பகிர்ந்தளிக்க வேண்டும்.

    பெற்றோர் அன்றாடம் வீட்டில் பார்க்கும் வேலைகளை பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தால் அவர்கள் பெற்றோரைப் போன்று பொறுப்பானவர்களாக
    வளருவார்கள். அதை விடுத்து ‘அவன் படிக்க வேண்டும். அவனை வேலை வாங்காதீர்கள்’ என்று பெற்றோர் கூறக்கூடாது.

    பெற்றோர் இருவரும் சேர்ந்து பிள்ளைகளுக்கு பொறுப்பை வழங்க வேண்டும். பிள்ளைகளை எந்நேரமும் படி படி என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

    அது அவர்களுக்கு மன அழுத்தத்தையே ஏற்படுத்தும். படிக்க வேண்டிய நேரத்தில் மட்டும் படிக்க சொல்லுங்கள். மற்ற நேரங்களை அவர்களுடன் சந்தோஷமாக செலவிடுங்கள்.
    Next Story
    ×